எண்ணமே பாறையாய்
சில எண்ணங்கள்..
தீர்மானங்களாகி..
முடிவுகளாகி..
செயல்களாகவும் ..
ஆகி விட்ட பின்பு..
***
எண்ணங்கள்தான் ..
எல்லாவற்றிற்கும் காரணம்..
என்பதை ஏற்றுக்கொள்ளும்
எண்ணம் மட்டும் ஏனோ
வருவதே இல்லை!
****
முடிவுகளை மாற்றிக்கொள்ளாத
தீர்மானத்தோடு இயங்குகையில்
எந்த எண்ணமும் குறுக்கிடுவதுமில்லை!
..
இது எண்ணிப் பார்த்தபின்..
வருகின்ற எண்ணம் ..
எல்லா செயல்களுக்கும்!