தூங்கும் நகரம்-1 தொடர்

புகைவண்டி சந்திப்பை தொட்டுக் கொண்டிருந்தது. பயணிகள் மூட்டை முடிச்சுகளை பெட்டியிலிருந்து காலி செய்து கொண்டிருந்தனர். பழக்கூடைகள், தேநீர் தூக்குகள் சில்லறைக் கணக்கு பார்த்து கல்லா கட்டிக் கொண்டது . அத்தோடு பயணம் முடிவுற்றதாக எல்லாம் ஏமாற்றின. வண்டி ஓட்டத்தில் சந்திப்பு பலகையை எங்கு தவறுதலாகப் வாசித்து விட்டமோ?என தன் கண்களையே நம்பாது இறங்கிக் கொண்டிருந்தவரிடம் ரகு

“யெஸ் க்யுஸ் மீ… இது கலாய் ஸ்டேஷனா?”

“இல்ல…அது அடுத்த ஸ்டேஷன் இன்னும் அரைமணி நேரமாகு”மென ஆசுவாசமடைந்தான். “நீங்க அங்கெயா போறீங்க?”

“ஆமாங்…!”

அவனது பார்வை ரகுவை வெறித்தது. வரிசையில் காத்திருந்தவரது கவனமும் கூர்ந்தது. நெரிசல் குறைந்து சிறிதில் ஸ்டேஷன் வெறிச் சோடியது. கடைசி சந்திப் பினைப் போல அங்கு வண்டி இளைப்பாறிக் கொள்ள, தான் ஒருவன் மட்டுமே அப்பெட்டியில் பயணிக்க இருப்பதை உணர்ந்தவன் மற்ற பெட்டிகளை எட்டிப் பார்த்தான். அனைத்திலும் அங்கொன்று இங்கொன்றென பிச்சைக்காரர்கள், திருடர்கள், மனநிலை குன்றியவர்களென மொத்தம் இருபது தலைகள் கூட இல்லை. செல்லாத டிக்கட்டுக்களை சுமந்து புகைவண்டி மெல்ல மெல்ல காய்ந்த நிலத்தில் பாம்பாக நெளிந்தது. சூரியன் பெரிதாய் சிவந்திருக்க எல்லாம் சிவந்து வேற்று கிரகமெனத் தோன்றியது . சக பயணிகள் என ஒப்பிட அவனுள் சகப்பில்லை. தனியாளாக அமர்ந்தவனின் சிந்தனை புகைவண்டி எழுப்பிய தடக்…தடக் சத்ததினுடே பின்னோக்கிப் போனது.

தொடரும்.....

எழுதியவர் : அபிமான் (27-Jul-15, 1:13 pm)
சேர்த்தது : அபிமான்
பார்வை : 216

மேலே