மரணத்தின் எண்

க்ர்ர்ர்ர்ர்..... க்ர்ர்ர்ர்ர்.... க்ர்ர்ர்ர்ர்....

ஹலோ

மெனி மோர் ஹேப்பி ரிடன்ஸ் அஃப் த டே!

தென்க் யூ.

என்னடா டல்லா தென்க் யூ சொல்ற? தூங்கிட்டு இருந்தியா?

இல்ல, இல்ல.

அப்புறம்? ஓ வேற யார்க்கிட்ட இருந்தோ விஷ் எதிர்ப்பாத்திட்டு இருந்திருப்ப? சரி, சரி. நான் வைக்கிறன்.

ஏய், நானே டென்ஷன்-ல இருக்கன். நீ வேற!

ஏன் டா? என்ன டென்ஷன்? என்ன டெட்லைனா? வொர்க் பண்ணிட்டு இருந்தியா?

இல்ல. இது வேற.

வேற என்ன? பிர்த் டே அன்னிக்கும் டென்ஷனா இருக்குறா ஆளு நீ மட்டும் தான். என் கிட்ட சொல்லு என்ன ப்ராப்ளம். மதி போன் பண்ணானா? அவனயும் கான்ப்ரன்ஸ்ல கூப்டட்டுமா?

இல்ல. வேணாம். அவன் கூட தான் நான் பேசறது இல்லனு தெரியுமில்ல. ஏன் திரும்ப திரும்ப டென்ஷன் பண்ற?

சரி, சரி கத்தாத. சரி. என் கிட்ட கூட சொல்லக்கூடாதா?

சொல்லக்கூடாதுனு இல்ல, சொன்ன நீங்க யாருமே நம்ப மாட்டீங்க.

என்னடா? இவ்ளோ அப்ஸெட்டா பேசுற?

நான் சாகப்போறேன் ஸ்வேதா.

டேய். என்ன உளற? என்னாச்சி உனக்கு? என்ன ப்ராள்ம் உனக்கு? பிர்த் டே அன்னிக்கு இப்டி பேசிட்டு இருக்க?

எனக்கு பயமா இருக்கு. எனக்கு சிம்டம்ஸ் தெரியுது.

என்ன சிம்டம்ஸ்? என்ன ப்ராப்ளம்? நாளைக்கு என் கினிக்-க்கு வா. ஏன் இப்டி அப்ஸெட் ஆகுற?

நீ நினைக்கிற மாதிரி இல்ல ஸ்வேதா. சிம்டம்ஸ்-னா என்ன சுத்தி நடக்குற விஷயங்கள். உனக்கு எப்படி சொல்றது? ம்ம்..... உனக்கு 27 க்ளப் பத்தி தெரியுமா?

27 க்ளப்பா? இல்லடா. தெரியாது. என்ன அது?

பிரபலாமான இசை அமைப்பாளர்கள் நிறைய பேர் அவங்களோட இருவத்தி ஏழு வயசுல தான் செத்துருக்காங்க. அப்டி செத்தவங்களோட லிஸ்ட் தான் 27 க்ளப். இப்ப எனக்கு 27 வயசு கம்ளீட் ஆகுது. எனக்கு பயமா இருக்கு. என்ன பண்ணறதுனே தெரில.

என்னடா நீ. ஏதேதோ உளற. அப்டி எல்லாம் ஒண்ணுமில்ல. நீ முதல தூங்கு. காலில பேசிக்கலாம்.

காலில வரைக்கும் நான் இருக்கனுமே.

நீ அடி வாங்க தான்போற. பேசமா தூங்கு. உனக்கு ஒண்ணும் ஆகாது. காலில முத வேளையா க்ளினிக், இல்ல வேணாம், ஹாஸ்பிட்டல் வா. என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். அவன் கிட்ட...

எனக்கு பைத்தியம்னு நினைக்கிறியா?

டேய். நான் அப்டி மீன் பண்ணல. சொன்னா கேளு. உன் நல்லதுக்கு தான்...ட்ட்டு ட்ட்டு ட்ட்டு.... ஹலோ, ஹலோ....

க்ர்ர்ர்ர்ர்..... க்ர்ர்ர்ர்ர்..... க்ர்ர்ர்ர்.....

க்ர்ர்ர்ர்ர்..... க்ர்ர்ர்ர்ர்..... க்ர்ர்ர்ர்.....

க்ர்ர்ர்ர்ர்..... க்ர்ர்ர்ர்ர்..... க்ர்ர்ர்ர்.....

----------------------------------------------------------------------------------------------------------------

இரண்டு நாட்களுக்கு பிறகு,

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அமித், தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை வீட்டு வேளை செய்ய வந்த பெரியவர் பார்த்து, அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தொலைப்பேசி மூலம் புகார் கொடுத்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, அமிதின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திரைப்பட உலகினர் அனைவரும் அமிதின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல், அமித் உலக புகழ் பெற்ற இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------------------------------------------------

சில வாரங்களுக்கு பிறகு,

காதலே காதலே எங்கு போகிறாய், என் கண்ணையும்... ஹலோ

என்னடா ஆச்சர்யமா இருக்கு? போன் பண்ணா எடுக்கவே மாட்ட?

நீயா? நான் க்ளைன்ட் கால்னு நினைச்சன். சரி சொல்லு.

என்ன சொல்லு? என் நம்பர் கூட இல்ல உன்கிட்ட. உன் மேல எல்லாருமே கடுப்புல இருக்கோம். அமித்-ஓட ஃபுனரல்-க்கு கூட நீ வரல, நீ எல்லாம் என்னடா ஃப்ரெண்டு?

தப்பு தான். எனக்கு நிறைய வேள இருந்துச்சு. அதுமில்லாம, எனக்குதான் கூட்டம்னாலே பிடிக்காதே. முழுக்க சினிமா காரனுங்களா நிப்பானுங்க. ஏதோ அவனுங்க தான் ஆதில இருந்து இவன் கூட இருந்த மாதிரி. நம்ம ஃப்ரெண்டு ஃபுனரல், இல்ல நல்ல ஃபன்க்ஷன்-னா கூட வேற யாரோ மாதிரி நம்ம இருக்கனும்.

அது சரி தான். இருந்தாலும் அமித் நம்ம ஃப்ரெண்டு டா.

உங்க ஃப்ரெண்டு. அதான் என்கிட்ட பேசக்கூட மாட்டானே.

அதுக்கு? ஃப்ரெண்டு இல்லனு ஆய்டுமா?

ஃப்ரெண்டு தான். நான் எவ்ளோ கெஞ்சினன். அவன் தான் பேசவேயில்ல. அவனுக்கு அவன் சினிமா ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியம். அப்டினா எனக்கும் என் ப்ரொஃபஷன் ப்ரெண்ட்ஸ் தான் முக்கியம்.

நானும் அப்டியே சொல்லிட்டு போன்ன கட் பண்ணிறட்டுமா?

பண்ணிக்கோ. நான் சொல்லறது உங்களுக்கு புரிலயா? அவன் தான் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட். இப்ப கூட அவனும் நானும் எல்லார்க்கும் ஃப்ளேம்ஸ் போட்டு விளாண்டத நினைச்சு பாத்திட்டு இருந்தன். என்னோட ஃபஸ்ட் ப்ரோக்கிராமே ப்ளேம்ஸ் தான். அவன்கிட்ட தான் ஃபஸ்ட் காட்டுனன். என் பேரயும், அவன் பேரயும் இன்புட்-ஆ குடுத்தான். எங்க ரெண்டு பேரோட பேருக்கும் ஒரே லெட்ட்ர்ஸ். எல்லா லெட்டர்ஸும் போய், கம்ப்யூட்டரே கனஃப்யூஸ் ஆய்டுச்சி. ரெண்டு பேரும் சிரிச்சிட்டு இருந்தோம். நானும் அத எல்லாம் நினைச்சி பாத்துட்டு தான் இருக்கன். அவன் தான் என்ன புரிஞ்சிக்கல. பெரிய உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆய்ட்டான்.

சரி டா, இருந்தாலும் நீ வந்துருக்கனும். அதவிடு நான் வேற ஒரு விஷயமா போன் பண்ணன்.

என்ன விஷயம்?

ட்ரிங்... ட்ரிங்.... ட்ரிங்...

ஒரு நிமிஷம் இரு ஸ்வேதா. ஒரு இம்பார்டன்ட் ஸ்கைப் கால்.
சொல்லு முத்து?
இல்ல,
அந்த ஃபான்ட் வேணாம். ஆமாம்......
ஏர்ஷிப் ஃபான்ட் யூஸ் பண்ணு.....
ஆமாம், அது தான் வேணுமாம்....
ஓகே. டா. பை.
தெரில. சுரேஷ்க்கு தெரியும்....
ஆமாம். அவன கேளு. பை.

சொல்லு ஸ்வேதா. என்ன விஷயம்?

அமித் டெத்தப்பத்தி தான். அதுல ஒரு மிஸ்ட்ரி இருக்கு டா.

என்ன மிஸ்ட்ரி?

அவன் பிர்த்டே அன்னிக்கு அவனுக்கு போன் பண்ணி விஷ் பண்ணன். அப்ப ஒரு விஷயம் சொன்னான். எதோ, 27 க்ளப்-னு.

27 க்ளப்-ஆ? நிஜமாவா சொல்ற?

ஆமாம். உனக்கு தெரியுமா?

தெரியும். பட், அமித்-ஒட டெத்தும் அதுல ஒண்ணா? ஒரு நிமிஷம் இரு. ஹே. ஆமாம். அவனோட பேரும் இருக்கு இதுல.

எதுல?

விக்கிபீடியா-ல பாரு. 27 க்ளப்-ல அவன் பேரும் இருக்கு.

அப்டியா?, நெட் பேலன்ஸ் இல்ல. அப்ப அவன் சொன்னது உண்மையா?

அவனுக்கு முன்னாடியே தெரியுமா? உன் கிட்ட சொன்னானா?

ஆமாம்.

நம்மவே முடில. பட், இதெல்லாம் வெறும் முட்டாள் தனமான நம்பிக்கை.

அப்டி சொல்லி விட்டுர முடியாது டா. அவன் சொன்ன மாதிரி தான் எல்லாமே நடந்திருக்கு.

கோ-இன்ஸிடன்ஸ்.

எது கோ-இன்ஸிடன்ஸ்? அவனோட பிர்த் டேட் இல இருந்து 27-ங்ர நம்பர் அவன் லைஃப் முழுக்க இருந்திருக்கு. பிர்த்டேக்கு நெக்ஸ்ட் டே அவனுக்கு கால் பண்ணன்.

========================================================================

ஸ்வேதா. சாரி என்னால ஹாஸ்பிட்டல்க்கு வரமுடியாது. என்ன ஃபோர்ஸ் பண்ணாத.

சரி, நான் வந்து உன்ன பாக்குறன்.

வேணாம். நான் யாரையும் இப்ப என் வீட்டுக்கு அல்லோ பண்ணறது இல்ல. எனக்கு பயமா இருக்கு, டெத் என் கண்ணுக்கு தெரியுது. நான் என் சாவ முடிஞ்ச வரைக்கும் தள்ளி வைக்கிறன். ஸ்வேதா யார் கிட்டயும் நான் இப்டி பேசுறனு சொல்லாத. போன் பண்ணி தொல்ல பண்ணுவாங்க. போன்-அ சார்சர்ல போடக்கூட பயமா இருக்கு.

டேய், டேய். ரிலாக்ஸ். ஏன்டா இப்டி பேசுறா? நீ நினைக்கிற மாதிரி எதும் நடக்காது.

நடக்கும். எனக்கு தெரியும். 27. இந்த நம்பர் தான் எல்லாத்துக்கும் காரணம். என் லைஃப் முழுக்க இது என்ன துரத்துது. நான் பொறந்த தேதி 27. வருஷம் 1989. எல்லாத்தையும் கூட்டுனா 27. கண்டிப்பா என் டெத் கூட 27-ங்கர நம்பரோட தான் இருக்கும்.

அப்படி எல்லாம் ஆகாது டா.

இல்ல ஸ்வேதா. எனக்கு தெரியுது. எங்க பாத்தாலும் 27-ங்கர நம்பர் தான் வருது. மதி-க்கிட்ட கூட சொல்லிருக்கன். எனக்கு எங்க பாத்தலும் 27-ங்கர நம்பரா தெரியுதுனு.

வெறும் நம்பரா மட்டும் வச்சிகிட்டு ஏன் டா இப்டி எல்லாம் கற்பனை பண்ணற?

கற்பனை இல்ல ஸ்வேதா. கற்பனை இல்ல. உனக்கு எப்டி புரிய வைக்கிறது. உனக்கு கர்ஸ் ஒஃப் னைன்த் பத்தி தெரியுமா?

இல்ல. நீ இதெல்லாம் நினைச்சிகிட்டு....

தெரியுமா தெரியுமா தெரியாதா?

தெரில.

அதும் இது மாதிரி தான். பல பிரபலமான இசை அமைப்பாளர்கள், அவங்களோட ஒன்வதாவது சிம்பனி ரிலிஸ்-க்கு அப்புறம் உயிரோட இல்ல. பீத்தோவன் கூட அப்டி தான் செத்துருகாரு. நானும் ஒன்பது சிம்பனி தான் இப்போதைக்கு ரிலீஸ் பண்ணிருக்கன். பண்ணும் போது, இது மிக பெரிய ரெகாட். நான் தான் இவ்ளோ சின்ன வயசுல இத செஞ்சிருக்கன், ஆனா, இப்ப அதுவே எனக்கு பிரச்சனையா இருக்கு.

டேய். நீ இதவிட இன்னும் நிறைய சாதிப்ப. கவல படாதா. நீ நினைக்கிற மாதிரி எதும் ஆகாது. பேசாமா தூங்கு.

சரி, இனி நான் கவலபட்டு ஒரு பிரோஜனமும் இல்ல. நான் செத்தாதான், நான் சொல்றதா நீ நம்புவனா, அதுவும் நடக்கும். ட்ட்டு... ட்ட்டு... ட்ட்டு....

அமித்.... அமித்... ஹலோ....

========================================================================

அவன் இப்டி எல்லாமா பேசுனான்?

ஆமாம். அவன் சொன்னத நான் நம்பல.

இப்ப நம்புறீயா?

நம்பிதானே ஆகனும்.

இது கோ-இன்ஸிடன்ஸ் தான். நீ நினைக்கிற மாதிரி, அவன் சொன்ன மாதிரி எல்லாம் இல்ல. எல்லாம் நம்மளோட கற்பனை.

அப்டி தெரிலயே. அவன் சொன்ன மாதிரி செத்துப்போய்ட்டேனே.

அவன் சொன்னது சரி-னா, அவன் 27 நம்பர் சம்மந்தப்பட்ட டேட்-ல தான் செத்திருக்கனும். ஆனா, அவன் 29-த் பெப்ரவரி தான செத்தான்.

ஆமாம். எனக்கு அதுதான் குழப்பமா இருக்கு. ஒருவேளை, 2016-ங்கரத (2+0)+(1+6) = 27 -னு எடுத்துகிறதா-னும் தெரில.

அப்டி எல்லாம் இருக்காது.

பட், ஏதோ ஒருவிததுலயாவது 27 சம்மந்தப்பட்டு தான் இருக்கும். அவனோட போஸ்ட் மார்டம் ரிப்போட்-அ பாத்தன். முடிங்ச வரைக்கும் டைம்-அ கால்க்குலேட் பண்ண ட்ரை பண்ணிருக்கன். பட், ரைடா ராங்கானு தெரில.

நீ தான் மேத்ஸ்ல டாப்பர் ஆச்சே கரெக்ட்டா தான் இருக்கும்.

இல்லடா. பட் என்ஸர் என்ன தெரியுமா வந்தது? நைட் 9 மணி 52 நிமிஷம் 7 செக்கண்ட்.

செக்கண்ட்ஸ் வரைக்கும் கண்டுபிடிக்கிறியா? பெரிய ஆளுதான்.

அதவிடுடா, இந்த டைம்-அ வச்சி பாத்தாக்கூட 9527. இதுலயும் 27 வருது பாத்தியா? இருந்தாலும் வேற எதும் கனைக்ஷன் இருக்கானு தெரிஞ்சிக்க தான் உனக்கு கால் பண்ணன். உன்னால எதும் கண்டுப்பிடிக்க முடியுதா பாரு.

அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. ஒரு நிமிஷம் இரு எதாவது கண்டுபிடிக்க முடியுமானு பாக்குறன். ஹே, ஹே.... எனக்கே நம்பிக்கை வரமாதிரி இருக்கே.

ஏன்டா, என்ன? எதாவது கண்டுபிடிச்சியா?

உனக்கு யூனிக்ஸ் டைம் ஸ்டாம்ப் பத்தி தெரியுமா?

இல்லடா.

அதாவது, ப்ரொக்ரமர்ஸ், அதும் வெப் ப்ரொக்ராமர்ஸ் யூஸ் பண்ற விஷயம் அது. நமக்கு இங்க ஆறு மணினா, லன்டன்-ல பண்ணிரண்டு மணி, இதுமாதிரி, ஒவ்வொரு இடத்துக்கும் டைம் மாரிட்டே இருக்குமில்ல.

ஆமாம்.

ஸோ, ப்ரொக்ரமர்ஸ் காமன் யுனிக் டைம் ஃபாலோ பண்ணுவாங்க. அது தான் யுனிக்ஸ் டைம் ஸ்டாம்ப்-னு சொல்லுவோம். அத டைம்-னு சொல்லமுடியாது. ஒரு வால்யூ, ஒரு நம்பர்னு வச்சிக்கலாம். நி சொன்ன டைம் வச்சி பாக்கும்போதும் என்ன நம்பர் தெரியுமா வந்துச்சு? 1456782727

பாத்தியா? நான் சொன்ன இல்ல.

இரு, இரு, ஏன் அவசரபட்ர. அந்த டைம் ரைடா ராங்கானு தெரிலனு தான சொன்ன?

ரைட்டா தான் இருக்கும். அவ சொன்னதும் ரைட் தான், நான் தான் புரிஞ்சிக்கல. உனக்கு தான் தெரியும்ல அவனுக்கு எங்க பாத்தாலும் 27-ங்கர நம்பர தெரியுதுனு. நீயாவது ஏதாவது செஞ்சி அவன காப்பாத்திருக்கலாம்.

இங்க பாரு. எல்லாமே கோ-இன்ஸிடன்ஸ் தான். அவனுக்கு மட்டுமில்ல, பல பேருக்கு இந்த பிரச்சன இருக்கு, எங்க பாத்தாலும் 27-ஆ தெரியுறது. நெட்ல அடிச்சு பாரு. பல பேர், இந்த மேட்டர சொல்லி பொலம்பிருப்பானுங்க. எல்லாம் நம்ம ப்ரம்ம. 27 மட்டுமில்ல, 44,37,11,13,23 நம்பர்ஸ் நம்பர் கூட அப்டிதான். டேக் இட் ஈஸி.

என்னால அப்டி எடுத்துக்கமுடியலடா.

எல்லாமே கோ-இன்ஸிடன்ஸ், உதாரணத்துக்கு, உன்கிட்ட பேசும்போது, ஒரு ஸ்கைப் கால் பேசின இல்ல. அதுல ஒரு ஃபான்ட் பத்தி பேசிட்டு இருந்தன் இல்ல?

ஆமாம், எதோ ஏர்ஷிப்னு சொல்லிட்டு இருந்த.

யெஸ். அதான், அந்த ஃபான்ட்-ஓட ஃபுல் நேம், ஏர்ஷிப் 27. ஜஸ்ட் கோ-இன்ஸிடன்ஸ். இல்ல?

உண்மையிலயே கோ-இன்ஸிடன்ஸ் தானா? எனக்கு இன்னும் கூட பயம் போகல.

நீயெல்லாம் டாக்டர்னு வெளிய சொல்லிக்காத. போ போய் தூங்கு. குட் நைட்.

குட் நைட்.

டேய். ஒரு நிமிஷம் கர்ஸ் ஒஃப் னனைத்னு கூட ஒன்னும் சொன்னான் டா.

எல்லாமே ஒண்ணு தான், கோ-இன்ஸிடன்ஸ். போய் தூங்கு போ. குட் நைட்.

ஒகே. குட் நைட்.

இரண்டு நாட்களுக்கு பிறகு,

-----------------------------------------------------------------------------------------------------------------------

"சுமார் 27 வயது கொண்ட பெண் மருத்துவர் தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைக்கு காரணம் என்னவென்று கவால்துறையினர் விசாரனை மேற்க்கொண்டுள்ளனர்." என்ற செய்தியயை ஸ்வேதா படித்ததிலிருந்து, இன்னும் பயம் அதிகமானது.

பின் குறிப்பு: 27 என்னும் எண் இனி உங்களை பின்தொடர்ந்தால் அதற்கு ஆசிரியர் பொறுப்பல்ல.

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (27-Jul-15, 11:59 am)
Tanglish : maranthin en
பார்வை : 2412

மேலே