நிவேனிதா - காதல் தொடர் - பாகம் 2 - உதயா
அடுத்த நாள் இருவரும் கல்லூரியை முடித்துவிட்டு வழக்கம் போல இரவு நேரத்தில் முகனூலுக்கு வந்தனர்.நிவேனிதா கலையரசன் வருவதற்கு முன்னாடியே முகனூல் வந்து காத்திருந்தாள்.கலையரசன் முகனூல் வந்ததும்
" ஏய் கலை ரிசல்ட் என்ன ஆச்சி பா " என்று நிவேனிதா கேட்டாள்
" நிவி நான் ஆல் கிளியர் பண்ணிடயா " என்று கலையரசன் சொன்னவுடன் நிவேனிதா ஆனந்தத்தில் துள்ளி குதித்தாள்.
" கலை நான் ஒன்னு சொல்லுவ,நீ கோவப்பட கூடாது சரியா? " என்று அவள் சற்று அச்சத்துடன் கேட்டாள்
" என்னடி சொல்ல போற சொல்லுடி " என்றான் கலையரசன்.
" இல்லடா எனக்கு உடம்பு சரில பா என்னால நெறைய நேரம் உன்கூட இப்போ பேச முடியாதுடா " என்று நிவேனிதா சொன்னாள் .கலையரசன் பதறிக்கொண்டு
"என்னடி ஆச்சி உனக்கு "
" நேத்து நல்லாதான இருந்த "
"இப்போ எப்படி இருக்கு "
" டாக்டர்கிட்ட போனியாடி"
" மருந்து மாத்திரை சாப்டியாடி "
"ஏன்டி என்கிட்டே சொல்லவே இல்ல " என்று
கலையரசனிடம் இருந்து மெசேஜ் நிற்காமல் எழுந்துகொண்டே இருந்தது. நிவேனிதாவிடம் சேர்ந்துகொண்டே இருந்தது.
" கலை எனக்கு நேத்துல இருந்து ஜொரம் டா " என்றால் நிவேனிதா
" அப்போ ஏன்டி நேத்து சொல்லுல அவ்ளோநேரம் எனக்காக எப்பி ல வெயிட் பன்னின்னு இருந்த " என்று கேட்டான் கலையரசன்
" இல்லடா நீதா இன்னும் ரிசல்ட் பேஜ் ஓபன் அகலன்னு நீ பயந்துனே இருந்த அதாடா நேத்து சொல்லுல
உன்கூடவே எப்பில இருந்த " என்று நிவேனிதா சொன்னாள்.
ஆனால் கலையரசன் அவளை திட்டிக்கொண்டே இருந்தான். இவர்கள் அறியாமலே ஒருவர் மனதினில் ஒருவர் புகுந்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இதுவரைக்கும் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால் இருவரும் ஏதோ நீண்ட நாட்களாக பழகியது போல் அவகளின் உரையாடல் எப்பியில் தொடர்ந்துக் கொண்டே இருந்தது.
ஒருநாள் நிவேனிதா கலையரசனிடம் " கலை நான் என்ன பத்தி ஒன்னு சொல்லுவ நீ யார்கிட்டவும் சொல்லகூடாது டா " என்று கேட்டாள்.
கலையரசனின் மனதில் இவள் அப்படி என்ன சொல்லப் போறாள் என்று நினைத்துக் கொண்டே "சொல்லுமா" என்றான்
" கலை நான் ரொம்ப நாளைக்கு உயிரோடு இருக்க மாட்ட டா. எனக்கு உடம்புல ஒரு பிரச்சனை டா " என்று நிவேனிதா சொன்னதும் கலையரசனிடம் கண்களில் கண்ணீர் பெருக்க தொடர்ந்தது.
" என்னடி சொல்லுற கிளியர்ரா சொல்லுடி " என்றான்
" கலை எனக்கு உடம்புல இரத்த வெள்ளை அணுக்கள்( white blood cell ) ரொம்ப கம்மியா இருக்குடா. அது எல்லாருக்குமே 40000 இருக்கும்டா. பட் எனக்கு 5000 விட கம்மிய தாடா இருக்கு அதான் நான் எப்போ சாவானு எனக்கு தெரியாதுடா எல்லா டாக்டர்ஸ்சும் முடியாது சொல்லிடாங்கடா " என்று அவள் சொல்ல கலையரசன் அழுதுகொண்டே " உனக்கு ஒன்னு ஆகாது" என்று தைரியம் சொன்னான்
இரண்டு நாட்கள் கழிந்த பிறகு உகலமே ஆனந்தத்தில் துள்ளி குதித்துக் கொண்டே இருந்தது. ஆம் அன்று பிப்ரவரி 14 " உலக காதலர் தினம் ".
அன்று இரவு எப்பிக்கு வந்தது " நிவி நீ உன் லவ்வரும் எங்க போனிங்க " என்று கலையரசன் நிவேனிதாவிடம் கேட்டான்.
" நான் யாரடா லவ் பண்ணுற எனக்கு லவ் ஒரு கேடா " என்று சளிப்புடனும் வருத்ததுடனும் கேட்டாள்
நிவேனிதா விரைவில் இறந்துவிடுவாள் என்று தெரிந்தும், கலையரசன் அவள் மீது கொண்ட காதல் மாறவே இல்லை
பிப்ரவரி 23 அன்று கலையரசன் நிவேனிதாவிடம் " நிவி நான் ஒன்னு உன்கிட்ட கேக்கவாடி " என்று கேட்டான். அவள் கேளுடா என்றாள்.
எல்லாரு தனது காதலை காதலியிடம் சொல்லும் போது "ஐ லவ் யு" என்று .சொல்லி தொடங்கையில்
அவன் மட்டும் " நிவி நான் உன்ன பொண்டாட்டின்னு கூப்டவாடி" என்று கேட்டதும், அவள் ஒரு கணம் கூட சிந்திக்காமல் சரி என்று சம்மதம் சொல்லிவிட்டாள்.காரணம் நிவேனிதா இதற்காகதான் பல நாட்கள் தவம் கிடந்தாள்.
" சரிடி நீ கழுத்த நீட்டு நான் உனக்கு எப்பிலவே தாலி கட்டுற" என்றான் கலையரசன்
" அவள் நீட்டிட்ட" என்றதும் "நான் தாலியை கட்டுற" என்று சொல்லி " தாலியை கட்டிவிட்டேன் " என்றான்.
" நிவி நீ இப்போ என்னோட பொண்டாட்டி" என்றான் கலையரசன்
" ஆமாம் கலை " என்றாள் நிவேனிதா
" அப்போ என்ன மாமான்னு கூப்டு டி " என்றான் கலையரசன்
" போடா மாமா எனக்கு வெக்கமா இருக்கு " என்றதும் கலையரசனின் மனதில் பட்டாம் பூச்சி சிறகடித்தது
ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துக் கொண்டதும் இல்லை .அலைபேசியில் கூடா பேசியது இல்லை.
நிவேனிதா கலையரசனிடம் " மாமா நான் ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்க மாட்ட டா ஏன்டா என்ன லவ் பண்ற நீ நல்ல பொண்ணா பாத்து லவ் பண்ணுடா " என்றாள் ஒருபுறம் அழுது கொண்டே.
" நிவி 100 வருஷம் சேர்ந்து வாழுறது மட்டும் இல்லடி வாழ்கை ஒருநாள் வாழ்ந்தாலும் தனக்கு புடிச்சவங்க கூட வாழுறதுதா வாழ்கை " என்று அவளை சமாதானமும் படுத்தினான்
" நிவி உன்னோட போன் நம்பர்தாடி எனக்கு உன்னோட வாய்ஸ் கேக்கணும் போல இருக்கு "என்றான்
அவளும் தனது தொலைபேசி எண்ணினை அவளுக்கு கொடுத்தாள். கலையரசன் முதன் முதலாக தனது மனைவியின் குரலினை கேக்க தனது தொலை பேசியில் அவளை அழைக்கிறான் .
தொடரும் ...