இம்சை அரசு தர்பார் -03

இம்சை அரசன்:- மொபைல் ஃபோன்களின் வளர்ச்சி இளைஞர் சமுதாயத்தை ஒருவிதத்தில் சீரழிச்சிடுமோன்னு அச்சமாக உள்ளது அமைச்சர்களே.....
என கூறியபடி சிம்மாசனத்தில் அமர,

"உங்க செல்ஃபோன்னுக்கு ரீசார்ஜே பன்னாமல்,மத்தவனுக்கெல்லாம் மிஸ்டுகால் கொடுத்து பேசுறவரு நீங்க.....உங்களுக்கு அதைப்பற்றி என்னக் கவலை????",
என்று ஓட்டேரிநரி குலுங்கி குலுங்கி சிரிக்க,,,,அமைச்சர் அவையே கலகலத்தது.
அதைக் கண்டு பொங்கியெழுந்த இம்சை...

"அடுத்தவன் செல்லை ஆட்டையப்போட்டு பேசுற நீயெல்லாம் என்னைய நக்கல் பன்றியா...???ராஸ்கல்....என்னயிது சின்னப்புள்ளதனமால இருக்கு,,,,",
என்று காட்டுக்கத்தலாக சத்தமிட,

"மன்னா,,,,செல்ஃபோன்னை வெச்சுக்கிட்டு நம்ம பசங்கப் பேசுறதைக் கேட்டால்,,,..நொந்தேப் போயிடுவிங்க...".
என முரா கூறியதும்,
"அப்படி என்னதான்யா பேசுவாய்ங்க??",
என்றார் இம்சை.

"அவர்கள் பேசுவதை சொல்கிறேன் கேளுங்க...",
என்ற முரா, அந்த உரையாடல்களை மிமிக்கிரி போல் செய்யத்தொடங்கினார்...

"ஹலோ......நல்லா இருக்கியா...?"

"ம்ம்ம்ம்....நீ நல்லா இருக்கியா....?".

"ம்ம்ம்ம்,,,,..அப்பறம்?"

"அப்பறம்..................................நீதான் சொல்லனும்",

"என்ன சொல்றது?..",

"எதாவது சொல்லு....",

"ம்ம்.........என்ன செஞ்சிக்கிட்டு இருக்க?",

"சும்மாதான் இருக்கேன்,.நீ?",

"நானும் சும்மா இருக்கேன்...",

"அப்பறம்......?",

"அப்பறம்......ஒன்னும்மில்ல....",

"சாப்புட்டியா...?'.,

"ம்ம்ம்.....நீ சாப்புட்டியா?",

"ம்ம்ம்ம்....",

"வேற,,,,/",

"வேற ஒன்னும்மில்ல..."
இவ்வாறு முரா பேசிக்காட்டிக்கொண்டிருக்கும் போதே..

"அடக் கருமம் புடிச்சவைங்களா.....ஒரு மேட்டரும் இல்லாம இப்படித்தான் ஊருக்குள்ள
அம்புட்டு பசங்களும் பேசிக்கிட்டு திரியறாய்ங்களா....",
என இம்சை தலையில் அடித்துக்கொண்டு மனம் நொந்துப் போனார்.

"இதுக்கூடப் பரவாயில்ல மன்னா....பைக் ஓட்டும்போது காதுல செல்லை வெச்சுக்கிட்டு,
வடையை திருட வந்த காக்காவைப் போல தலையை சாச்சுக்கிட்டு...ரோட்டை கீழப்பார்த்துக்கிட்டே.........பேசிக்கிட்டே வண்டிய ஓட்டுகிறார்கள் சில பேரு...",
என டுமீல்குப்பம் வெளவ்வாளு கூறியதும்,
" அட நாசாமாப் போறவைங்களா....எமனுக்கு வெல்கம் பார்ட்டி தந்து வா வா ன்னு கூப்பிடுறாய்ங்கப் போலிருக்கே..."
என்றார் அமைச்சர் வண்டுமுருகன்.

"சின்னப்புள்ளைங்க ரொம்ப பேரு.....வீட்டுல உள்ள செல்லைக் கையில்ல வெச்சுக்கிட்டு கேம் விளையாட்டிக்கிட்டே இருக்காங்க....
அதனால கண் பார்வை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது மன்னா...",
என்று ஓட்டேரிநரிக் கூறியதும்..
"யோவ்....அதெல்லாம் அதுகல பெத்தவங்க கண்டிக்க வேண்டிய விஷயம்யா.....",
என இம்சை சட்டென கூறிய மறு நிமிடம்,

"ட்ரிங்...ட்ரிங்...",
என இம்சையின் செல்ஃபோனில் மெசேஜ் டோன் ஒலிக்க அதை ஓப்பன் செய்துப் படித்த இம்சை தலையில் கைவைத்தப்படி அமர்ந்தார்...

"என்ன ஆச்சு மன்னா?"
என, ஓட்டேரிநரி கேட்டதும்

"நான் ,இப்ப ஃபிரியா இருக்கேன்....டைம் பாஸுக்கு,உன் நாட்டுக்குப் பேருக்கு வரவா,...ன்னு பக்கத்து நாட்டு மன்னன் "கவ்வோதி கருப்பண்ணன்"எஸ்.எம்.எஸ் அனுபிருக்கான்யா...",
என்றார் இம்சை கண்கள் கலங்கியப்படி...

"என்னது போரா????........................",
என்ற கோரஸாக கதறிய அமைச்சர்கள் மறுநிமிடமே எஸ்கேப் ஆனார்கள்.

"எனக்கு கஷ்டம்னு வந்துட்டா....அம்புட்டுப்பேரும்....கேரம் போர்டில கலைத்துவிட்ட காய்களைப் போல கலைந்துப்போயிடுறாய்ங்களே.......நீங்களாம் நல்லா வருவிங்கடா........!!!!!!!.",
என புலம்பத் தொடங்கினார்................


நன்றி ;தகவல் தளம்

எழுதியவர் : தகவல் தளம் (27-Jul-15, 1:41 pm)
பார்வை : 211

மேலே