இம்சை அரசு தர்பார் -02

இம்சை அரசன்:- இன்றைய பிரச்சனை என்னயா...சீகிரம் சொல்லித் தொலைங்க...

மந்திரி ஓட்டேரி நரி: மன்னா...நம் அரசு கஜானா காலியாகிவிட்டது.இந்த நிலை நீடித்தால்
சீக்கிரம் ஆட்சியை ஊத்தி மூடிட்டு எல்லாரும் வீட்டுக்குப் போக வேண்டியது தான்...

சட்டென அதிர்ச்சி அடைந்த இம்சை அரசன் சற்றே சுதாரித்துக்கொண்டு,

இம்சை;-விற்பனையில் பால்,மளிகை சாமான்கள் விலைகளை ஏற்றி மக்களிடம் பணம் பறிக்கவேண்டியது தானே...
என்றதும்,

அமைச்சர் ஆதிவாசி:-யோவ் மன்னா...அதெல்லாம்,அல் ரெடி ஏத்தியாச்சுயா....
என்றார்.

இம்சை:-மின்கட்டணத்தை ஏற்றுங்கள்...

ஆதிவசி:அந்தக் கரும்மத்தையும் செஞ்சாச்சு...ஆனால் மின் வெட்டு தான் அதிகமாக ஆகிவிட்டது...,
என்றதும்,

ஓட்டேரி நரி:-மன்னா..."தங்கள் ஆட்சியில் காதல் வரும்போதுக் கூட சுகமாக இல்லை....கரெண்ட் வரும்போதுதான் சுகமாக உள்ளது"....
சீரியாஸாக நக்கல் செய்தார்.

இம்சை:-அதற்கு நாம் என்ன செய்ய முடியும்...
நப்பிப்பசங்களா....என்மீது குற்றம் சொல்லாவிட்டால் உங்களுக்கு வேலையே ஓடாதே,,...
,என்று கூறிய இம்சை,சட்டென,

"பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றி தொலைக்க வேண்டியதுதானே...
என்றதும்,

"அதை மேல உள்ளவங்க எப்பவோ செய்துவிட்டார்கள்.....",
என்றார் அமைச்சர் ராரா.
அதைக் கேட்ட இம்சை அரசன்,

"வேறு எதை ஏற்றினால் பற்றாக்ககுறை பிரச்சனை நீங்கும்?'<
என்றதும்,

"ஒட்டுமொத்த தமிழக மக்களையும் தூக்கில் ஏற்றிவிட்டால்....பிரச்சனையே இருக்காது மன்னா...",
என்று கூறிய ஓட்டேரி நரி,

"ஹையோ,....ஹையோ....உங்க அப்ரோச்சே செமக் காமெடியா இருக்கு மன்னா..",
என குலுங்கி குலுங்கி சிரிக்க அதக் கண்ட இம்சை கண்கள் சிவக்க..

"போடா கொங்காக்கோ....எனக்கு எவனுமே எண்ட்கார்டு போடமுடியாதுடா...",
என்றார் ஆவேசமாக.

"மன்னா...ஒரு ஐடியா சொல்லவா?",
என பவ்யமாக எழுந்தார் அமைச்சர் முரா,.
அதைக் கேட்ட இம்சை...
"ம்ம்ம்....என்ன சொல்லு,...",
என்றதும்,.

"பக்கத்து மாநிலங்களில் அஞ்சு பத்து கைமாத்தா வாங்கி பொழப்ப நடத்திடுவோமா...",
என்றதும்,

"சபாநாயகரே...அமைச்சர்கள் அனைவரும் என்னை கேவலமாக பேசுகிறார்கள்...
இவை அனைத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்....",
இம்சை அரசன் ஆவேசமாக கூறியதும்,
"அமைச்சர்களாவது கொஞ்சம் டீசண்டா பேசுறாங்க...ஊருக்குள்ளப் போயி மக்களிடம் கேட்டு பாருங்க...
பச்சை பச்சையா உங்களை ரொம்ப கேவலமா பேசுறாங்க மன்னா...",
என்றார் சபாநாயகர்.

அவையில் இருந்த அனைவரும் ரவுண்கட்டி அடித்ததும் இம்சைக்கு இம்சையாக போக,
"ஓகே...சபையை கலைங்க...நாளை பேசலாம்..."
என மெல்ல எழுந்த இம்சை அரசன்,

"ம்ம்ம்...நாளை முதல்,நம் அவையில் மழைக்கால கூட்டுத்தொடர் ஆரம்பம்....",
என்று கூறியதும்,

"மழைக்காலக் கூட்டுத்தொடரா?அப்படின்னா எல்லாரும் குடைக் கொண்டு வரவேண்டுமா மன்னா....?",
என ஓட்டேரி நரி கேட்டதும்.....

கண்களில் கண்ணீர் பெருக....தள்ளாடி தள்ளாடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்....இம்சை அரசன்

நன்றி ;தகவல் தளம்

எழுதியவர் : தகவல் தளம் (27-Jul-15, 1:39 pm)
பார்வை : 153

மேலே