என் நிரந்தரக் காதலி
என் மீது பட்டுத்தெறிக்கும்
காதல் பார்வையின் வீச்சத்தில்,,,
நீயணிந்திருக்கும்
பட்டடை கால்
கொலுசுகள்
தெறித்தோடுகிறதே பார்த்தாயா,,,
பிடியில் நழுவிய
மீனின் மகிழ்சியில் பிடிபடாத
மோகனத்தின்
முதற்சாயலாய்,,,
என் முகம்
கண்டெடுத்த
மீன் விழிக் கண்ண(ழ)கியே,,
அந்தி நிலவின்
பிறைமதியே,,,
உமது காதல் பார்வையின்
கடைசித் துளிகளை
நான் மட்டுமே
பருகிட வேண்டும்,,,
பார்வையினை
விதைத்துவிடு
நான் கொண்டது சுயநலமேதான்,,,
நலமாக
வாழ விரும்பி
என் மனதை
உன்னிடம்
பறிகொடுத்தேனே
தானாக வந்ததிங்கே
எனக்கான
சுயநல வேட்கை,,,
பட்டுத் திருந்தினேன் பட்டுச் சேலையில்
பல வண்ணங்களை
பட்டுடல் மேனியில்
பூசிச் சென்ற
பட்டாம்பூச்சிகளை
பார்வையாலே
கொன்றுவிட
தோன்றுதடி
எனக்கு,,,
என் பார்வையில்
மறைந்து
கண்கட்டி வித்தை
காட்டுகிறது
அப்பட்டாம்பூச்சிகள்,,,
ஒன்றே அறிந்தேன் பூக்களின் வண்ணங்கள் பூசிய அழகு
தேவதைக்கு
வண்ணப் புதையல்கள் பூமியிலின்னும் பிரித்தெடுக்கப் படவில்லையென்று,,,
ப்ரியமாய்
வேண்டுகோளொன்றை வைக்கிறேன்,,,
உந்தன்
பார்வையை மட்டும் திருப்பி விடாதே,,,
திசையெங்கும்
அலைந்து திரிந்தாலும் அப்பார்வையென்றுமே எனக்கான
புதுவரவே,,,
கெஞ்சியும் கொஞ்சியும் என் கண்களாலே
கேட்கிறேன்,,,
காதலியே உனது
காதல்
பார்வையை மட்டும்
என்றுமே
திசை திருப்பி
விடாதே!
பார்த்தவுடன்
முடிவு
செய்துவிட்டேன்
நீதான் என்
நிரந்தரக்
காதலியென்று,,,