ஏமாற்றிவிடுகிறாய் நீ......
நீ
இருக்கும் போதும்
என்னைப் போல்
யாரும் உன்னை
நேசிக்கவில்லை
நீ இறக்கும் போதும்
யாரும் உன்னுடன்
இறக்கப் போவதில்லை
ஆனாலும் அவர்களுக்கெல்லாம்
பயந்து கொண்டு
உன்னை நேசிக்கும் என்னை
எப்போதும்
ஏமாற்றிவிடுகிறாய் பெண்ணே நீ........!!!