கலாம்
........என் ஆசைகளாம்!..
இவரைப் பார்க்கலாம்,
பேசக் கேட்கலாம்
என்று எண்ணியிருந்தேன்..
இறைவனோ
தன்வசம் சேர்க்கலாம்
என்றும்
நான் தோற்கலாம் என்றும்
இந்த அப்துல் கலாமை
சரித்திரமாய் ஆக்கலாம்
என்பதில்
அவசரப் பட்டிருக்கலாம்...
அ.மு.நௌபல்