அப்துல் கலாம் மரணம்

"கலாம் காலமானார்"
சொல்லிநிற்கும் டி.வி முன்
சொட்டும் கண்ணீரோடு நான்....
இந்தியாவின் இளைஞர்களைக்
கனவு காண
சொன்ன இதயம்
வெறும் கனவாம்
இவ்வுலகம் விட்டுத்
தொடர்கனவு யாத்திரையில்
தொல்லையின்றி பயணித்ததே...
அக்னிச் சிறகுகளை
அகல விரித்த
இந்த அறிவுப் பறவை
இதோ
சொல்லாமலே பறந்துவிட்டதே..

விஞ்ஞானம்
இதோ விக்கி அழுகின்றது....
சோதனைக் கூடங்கள்
சோகத்தில் கரைகின்றன...
விண்கலன்கள்
விண்ணீர் வடிக்கின்றன...
அலைவரிசைகள் அலறுகின்றன...

அனாதை ஆகிப்போனதாய்
அத்தனை சிறுவர்களும்
பிரகடனப் படுத்துகின்றனர்..
ஒரு பிரம்மச்சாரி தந்தைக்காக...

அரசியல்வாதிகள்
முதல்முதலாய்
அழுகின்றனர்..
குடிக்காக,அரசிற்காக
ஆசையே படாத
குடியரசுத் தலைவர்
இவராகத் தான்
இருக்க முடியும்
என்ற உண்மை சுட்டதால்....
கலாம் என்றால்
வார்த்தை...
இறைவனின் நாமமும் கூட...
இவர்
அப்துல் கலாம்..
இறைவனின் அடிமை
ஆனால்,
இலட்சிய வார்த்தைகளின்
எஜமானன்...
கலாம் என்றால்
தமிழில்
குதிரை என்றும் அர்த்தமுண்டு...
ஒரு வேளை
இவரின் விவேகத்தின்
வேகத்தை
அறிந்த ஒருவர்தான்
பெயர்சூட்டியிருக்க வேண்டும்
இவருக்கு.....

இப்போது
நானும் ஒரு பெயர்
சூட்டத் தோன்றுகிறது..
இவரை அறியாதவர்களுக்கு..
"கல்லாம்" இவர்கள்!!

அ.மு.நௌபல்

எழுதியவர் : அ.மு.நௌபள் (28-Jul-15, 2:36 pm)
பார்வை : 189

மேலே