பலவீனத்தை வெல்வோம்!
பலமும் பலவீனமும் கொண்டோம்!
பலத்தின் அளவை அறிவோம்;
பலவீனத்தின் நிலையைப் புரிவோம்.
பலத்தின் இறுமாப்பையும்,
பலவீனத்தின் பாசாங்கையும்
நிலைதடுமாறாமல் நோக்கியறிவோம்.
இறுமாப்பிற்க்குவிடை கொடுப்போம்;
பாசாங்கை பாராதொதுக்குவோம்.
நம் பலத்தால் நம் பலவீனத்தை வெல்வோம்!
நம் குணத்தால் குன்றின்மேல் விளக்காய் ஒளிர்வோம்.
மலமும் குலமும் துறப்போம்.
அவனியில் நாம் யாவரும் அளப்பரிய அன்பினில் நிறைவோம்.
பாலு குருசுவாமி