கனவே கலையாதே

என்னென்ன கனவு கண்டாயோ - எங்களை
கனவு காண வைத்தவரே!
வல்லரசு வரிசையிலே இந்தியா - இது
உங்களின் கனவு - நாங்கள் கண்ட
கனவு எல்லாம் நீங்கள் தானையா!

உங்கள் கனவு வெல்லும்நாட்கள்
வேகுதூரமொன்றும் இல்லை. ஆனால்
எங்கள் கனவு நீரின்றி
வெல்லுமா?

காலன் என்னும் சாத்தான் - எங்கள்
கலாமென்னும் கனவை கலைத்தானோ? - இல்லையே!
மன்னரிக்கும் உடலைத்தனேயொழிய - அவர்
கண்ட கனவுகளை அல்ல...

ஆயிர மாயிரம் ஆண்டுகள் ஆயின் - காலத்தை வென்ற
கலாம் என்னும் ஜீவன் - ஏங்கிய
இளைஞர்களின் இதயகூட்டினிலே
இயங்கிக் கொண்டே தான் இருக்கும்....

அன்னாரின் கானவெல்லாம் நினைவாக
ஆண்டவனை பிரார்த்தி கொள்கிறோம்...


கண்ணீருடன்
தி,மலை - சந்துரு

எழுதியவர் : chandru (28-Jul-15, 3:55 pm)
Tanglish : kanave kalaiyaathe
பார்வை : 147

மேலே