அப்துல் கலாமிற்கு இந்தியா 2020ன் கடிதம்

நான் நலமாக இருப்பதற்கு
அறிவியல் களம் குதித்து
சுகம் தொலைத்தவனே

உன் உடல் இம்மண்ணில் மலர்ந்த நாளில் தான்
நான் கரு உருவானேன்

என் அறிவியல் வளத்தை வளக்க- உனக்கு
ரகசியநிதி ஒதிக்கீடாம்
சற்றும் மறந்தும் கூட
இதைவெளியில்
சொல்லிவிடாதீர்கள்
அது எனக்கும்தான் வெட்கம்

எத்தனையோ தொலைநோக்கு பார்வைகள் பல
தொலைந்துபோன காலத்திலும்
உன் பார்வைக்கும் நீ விட்ட ஏவுகணைக்கும்
ஒரு தொடர்புண்டு ..
இரண்டிற்கும் என்றுமே வெற்றி தான்

பொக்ரான் அணுகுண்டை நீ வெடித்தபோதுதான்
அமெரிக்காவும் என்னை அழைத்து
உலக அணுஆயுத பள்ளியில் சேர்த்து கொண்டது

கனவுகளை நீகண்டு
நிகண்டு கூறிய கலாமே

உறக்கத்தில் காண்பது கனவல்ல - உன்
தூயிலை துறக்க வைப்பதே கனவு என்றாயே
எட்டிபிடிக்க நினையுங்கள் வின்மீனை
குறைந்தது நிலவிலாவது விழலாம்
இதுதானே நீ காண சொல்லும் கனவுகளின்
" பிள்ளையார் சுழி "

மாணவர்களிடம் என்னை நீ ஒப்படைப்பது
புரிந்தது எனக்கு
எறும்பும் , மாணவனும் மட்டும்தானே
தன் எடையைவிட 50 மடங்காவது
தூக்க கூடியவர்கள்

சத்திய சோதனை தான் வந்திருக்கும் சாவிற்கும்
உத்தமன் ஒருவனையும் உயிரோடு விடுவதில்லையே என்று

கவலை வேண்டாம்
உங்களின் மாணவர்கள் தோள்களில்
நான் அமர்ந்துவிட்டேன்

இனி 2020ல் உங்களை சந்திக்கிறேன்
மற்றவை நேரில்.............

எழுதியவர் : மதனா (28-Jul-15, 3:32 pm)
சேர்த்தது : மதனா
பார்வை : 2385

மேலே