அகிலம் போற்றும் பேராசான் கலாம்

அணு விஞ்ஞானியே - எங்கள்
அணுக்களில் நிறைந்திருக்கும் விந்தையே
பேராற்றல் கொண்ட பெரியோரே
பேரறிஞர் எனும் பட்டத்திற்கு மேலோரே!

ஏற்றமிகு வாழ்வு நீர் கண்டாலும்
எளிய வாழ்க்கையில் இன்புற்றவரே
ஏவுகணை மனிதனானாலும்
எட்டு திக்கும் தமிழை பரப்பி
பாரதியின் கனவை நனவாகியவரே

தொலைநோக்கு பார்வையால் தன்னை தொலைத்தவரே- நீர்
தொடாத துறைகள் இல்லை- உன் மேல்
படாத பார்வைகளும் இல்லை- இருந்தும்
தாய் நாட்டிற்கே தன்னை அர்பநித்தவரே!

அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் தலைவரே
ஆசிரியர்களுக்கெல்லாம் குருவே!
மதம் பார்க்காத மாமனிதமே
மாமிசம் துறந்த முரணே!

எத்தனை பேர் உம் ஆன்மா
சாந்தியடைய வேண்டினாலும்- அது
குறைந்த பட்சம் இரண்டாயிரத்து இருபது வரைக்குமாவது
அமைதி அடையாமல் இருக்கும்..

ஆழ்ந்த வருத்தத்துடன்
ப. சம்பத்குமார்

எழுதியவர் : சம்பத்குமார் (28-Jul-15, 8:07 pm)
பார்வை : 90

மேலே