விலங்குகளை ஒடித்தார்
வணிகத்தால் வந்தவர்கள் பணியவைத்து நம்மையெலாம்
வாட்டல் கண்டு ,
பிணியான வெள்ளையனை துணிவோடு விரட்டுதற்கு
போரில் நின்று ,
தணியாத வீரமுடன் கனியாக விடுதலையை
பெறவுழைதார் !
குனியாத நிலைகொள்ள , குடிதன்னைக் கெடுக்கின்ற
குடிப்பழக்கம் ,
சாடிட்டார் ! தான் கொண்ட தென்மர மத்தனையும்
வெட்டிச் சாய்த்தார் !
ஓடிட்டார் , கதர்தூக்கி ஊரெல்லாம் விற்றிட்டார்,
கொள்கை நின்றார் !
கேடின்றி எழையர்கள் களிப்படைய செல்வத்தை
கொடுத்து வந்தார் !
பாடின்றி வாழ்கின்ற பார்ப்பனின் முகமூடி
தனைக் கிழித்தார் !
ஆரியனின் இதிகாச ஆபாசம் தீயிட்டு
கொளுத்தி ஏறாய்
போரிட்டார் ! தெய்வத்தால் பொய்சொல்லி சுரண்டிவாழும்
பேடி யோரை
நேரிட்டு வென்றிட்டார் ! மொழியாலும் இனத்தாலும்
நிமிர்ந்து நிற்க
சீரிட்டார் நாகம்போல் ! சீற்றத்தால் சமுதாய
செம்மை காண ,
அலையாக ஆர்த்தெழுந்தார் !
அடிக்கின்ற சொல்லாலும் , கடிக்கின்ற எழுத்தாலும்
நமது வாழ்வை ,
இடிக்கின்ற ஆரியனும் , துடிக்கின்ற நிலைகொள்ள ,
முது கெலும்பை ,
ஓடிக்கின்ற முறைமையினில் விடுக்கின்ற அம்பைப் போல்
துளைத்து , வீழ
நடக்கின்ற கொள்கையினால் , கிடக்கின்ற நம்மினத்தை
எழவே செய்தார் !
அலையாக ஆர்த்தெழுந்தார் ! ஆதிக்கம் செய்கின்ற
வடவர் தம்மை ,
குலையாக வீழ்ந்திடவே , குறையற்ற செந்நெறியில்
தானும் இன்று
மலையான நெஞ்சத்தால் , மதியோடு தமிழரின
மறவர் தம்மை ,
நிலையாக செய்திட்டார் ! நெருங்கிவிடும் விலங்குகளை
ஒடித் தெடுத்தார் !