பாரத ரத்னா அப்துல்கலாம்

எங்களை கனவு கான சொல்லிவிட்டு
நீர் உறக்கத்திற்கு சென்று விட்டீரோ...
உம் உயிர் பிரியலாம் உடல் மறையலாம்
ஆனால் உமது கனவு லட்சியம்
எங்களோடு பயணித்து கொண்டிருக்கும்...
இளைஞர்களுக்கு "அக்னி சிறகு" தந்தாய்
2020 உங்களது கனவை நனவாக்க
அது தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும்...
எங்கள் மனதில் என்றும் இளைஞனே
சரித்திரம் போற்றும் சாதனை நாயகனே
எளிமையான எங்கள் தலைவனே
நேற்று நீ உயிரோடு
இன்று நீ எங்கள் உணர்வோடு
நாளை உன்னால் வெல்வோம்
உலகை அன்னை தமிழோடு.....
எங்களோடு கலந்திட உமது
ஆத்மா இறைவனடி சேர
கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறோம்....

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (28-Jul-15, 10:07 pm)
பார்வை : 472

மேலே