சொல்லிமுடிக்க முடியுமோ ?
பிறக்குமுன்னே வரம் பெற்றோம்
பிரியும் வாழ்வில் வயது வந்தோம்
சந்திக்கும் வேளை காதல் என்றோம்
சகியே நீ எனக்கு சாட்சி என்றேன்
சாவே இல்லையென்று நீ மீட்சி தந்தாய்
இன்பமென்றே என்னுள் வந்தாய்
இவளே நானென்று உயிரில் நின்றாய்