கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி

கலாமுக்கு ...........
கண்ணீர் அஞ்சலி
மா மனிதரின் .......
மரண செய்திகேட்டு
மனசு இங்கே ....
மறித்து போய்விட்டது

அந்த.........
அக்னி சிறகின்
ஆயுள் ரேகையை
அறுத்து விட்டது யார் ?
உரை வீச்சின் போதே .........
உன் உயிர் மூச்சை
எடுப்பதற்கு எமதூதனுக்கு
அப்படி! என்ன ?...........
அவசரம்

விண்வெளி ஆய்வில்
விருப்பமுள்ளவர்
என்பதால் .........நீ
விண்ணுக்கு சென்று விட்டாயோ
உடலை மண்ணுக்கு ........
தந்துவிட்டு -உன்
உயிரை மட்டும் ........வேறு
எந்த கிரகத்திற்கு
ஏவி விட்டாய் ?

இத்தனை .........ஆண்டுகளாய்
இந்த புதிய விண்வெளி
பயணத்தை .....ஏன் ?
எங்களுக்கு சொல்லவில்லை ...
நிலவுக்கு ........
மனிதனை அனுப்புகிறேன்
என்று சொல்லிவிட்டு
நீயே ! சென்றுவிட்டாயே

உன் இந்திய தாயை........
பகைவரிடமிருந்து
பாதுகாக்க -உன்னைவிட்டால்
இனி யார் ?
சவபெட்டிக்குள் ......நீ
சத்தமின்றி உறங்கினாலும் ...
உன் கனவை நினைவாக்க
அக்னி சிறகுகளால் .......
அன்றாடம் பறந்து கொண்டிருப்போம் ............
இரா.மாயா

எழுதியவர் : இரா .மாயா (29-Jul-15, 9:00 pm)
பார்வை : 98

மேலே