சபதமெடுப்போம்

படகோட்டி மகனும்
பாரத ரதனாவாக முடியுமென்று நிறுபித்தவரே
அரசியல் செய்யாத உன்னிடம்
அரசியல் சாசனமும் மண்டியிட்டது பலமுறை.

இந்தியாவின் எதிரிகள் கூட உன்னை
இகல்வதற்க்கு தயாரில்லை என என்னும் போது
மகிழ்கிறது இம் மாநிலமே..

தடி ஊன்றும் கிழவன் முதல்
நடை தடுமாறும் குழந்தை வரை
கலாம் என்றால் சலாம் போடுகிறதே...
இன்னும் கொஞ்சம் இருந்திருக்க வேண்டுமையா
நீர் உன்
இதயச் சுமையை குறைத்திருக்க வேண்டும் ஐயா..

விஞ்ஞானிகளுக்கு விளக்கம் சொன்னாலும்
மழலை சொற்களில் மயங்கிக் கிடந்தவரே
உன் பெயருக்கு முன்னால் இருப்பதற்காக
பெருமைப் பட்டுக் கொள்கிறது
"பாரத ரத்னா ".

இந்த பூமி உன்னை தாங்கட்டும்
இந்த நாட்டை நான் தாங்குவேன் என்றா
பாரதத் தாயின் காலடியில் வந்து கட்டுண்டாய்...

இன்று உன்னால் எங்களுக்கு வரும்
கண்ணீரில் தன்னை கழுவிக் கொள்கிறது பாரதம்
நீ கண்ட கனவை நிஜமாக்க..
வல்லரசு வாழ்வை வரவேற்க..
சபதமெடுப்போம் உன் சன்னதியில்

"இரண்டாயிரத்தி இருபதில்
இந்தியா வல்லரசு
இளைய சமுதாயத்தின் நல்லரசு" என்று

எழுதியவர் : parkavi (29-Jul-15, 10:40 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 59

மேலே