முத்தம் என்னுமொரு ஊட்டச்சத்து
இந்நாட்களில்
உன் உதடுகள்
என் கன்னங்களில்
பிரிவதைக் காட்டிலும்
உன் கைப்பேசியின்
மடியிலே விரிவதே
மிகுதி!
உன்னிரு உதடுகள்
உதிர்க்கும் உலர்வான
முத்தங்கள்…
என்னிரு கன்னங்களை
அடையாததால் நாளும்
உடல் மெலிந்து
நோகிறேன்!
ஊட்டச்சத்து இல்லாது
உடல் மெலியும்
குழந்தை போல்!!