என்ன காரணம்

என்ன காரணம்?

அழகு உதயமாவது ஜனனத்தில்
ஆசை எழுவது ஆள்மனத்தில்
இளமை மிளிர்வது சிநேகத்தில்
ஈகை துளிர்வது இனஉணர்வில்

உறவு படர்வது ஆனந்தத்தில்
ஊுக்கம் நிறைவது உத்வேகத்தில்
எழுச்சி சிறப்பது செயலாக்கத்தில்
ஏற்றம் அடைவது வெற்றியின் நிறைவில்

ஐயம் பிறப்பது அச்சநிழலில்
ஒழுக்கம் வெளிப்படுவது நல்லெண்ணத்தில்
ஓங்கும் புகழ் அத்தனையும் முழு முயற்சியில்
அஹ்தே வாழ்வின் ரகசியம் !

எழுதியவர் : (30-Jul-15, 3:00 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : yenna kaaranam
பார்வை : 119

மேலே