மது தேவைதானா

தீயென்று தெரிந்தும் கையைச்
சுட்டுக்கொள்வார் யாருளர்?
பாம்பென்று தெரிதும் அதற்குப்
பால் வார்ப்பார் யாருளர்?

முள்ளென்று தெரிந்தும் தன்னைக்
குத்திக்கொள்வார் யாருளர்?
புதைகுழியென்று தெரிந்தும் அதில்
குதித்திடுவார் யாருளர்?

மதயானையென்று தெரிந்தும் அதை
மறித்து நிற்பார் யாருளர்?
முதலையென்று தெரிந்தும் தன்
தலை விடுவார் யாருளர்?

விஷமென்று தெரிந்தும் அதை
அருந்திடுவார் யாருளர்?
போதையென்று தெரிந்தும் தன்
பாதை மாறல் தேவைதானா?

உயிர்கொல்லும் எனத் தெரிந்தும்
உடன் வைத்தல் தேவைதானா?
உன்னை நம்பும் உன்குடும்பம்
தெருவில் நிற்றல் தேவைதானா?

இது தெரிந்தும் இத்தனைநாள்
மது அருந்தும் பழக்கமென்ன?
மதி மயக்கும் மது துறந்தால்
விதி மாறுமென்பது உண்மை!

- ரத்னமாலா புரூஸ்

எழுதியவர் : ரத்னமாலா புரூஸ் (31-Jul-15, 12:33 pm)
Tanglish : mathu thevaithaanaa
பார்வை : 73

மேலே