மாத - விலக்கு

அவன் வந்து கேட்கும் போது
நான் தந்து மகிழ்ந்த பொழுதும்
நான் விரும்பும் அரவணைப்பை
இன்று அவன் தர மறுப்பதேனோ...
குடும்ப குல விளக்கை
தெருவிளக்கைப் போல
வெளியில் தங்க வைத்த காலமெல்லாம்
தீண்டாமையினிலும் கொடியதன்றோ...
ஓயாது உழைக்கும் நாங்கள்
ஓய்வைக்கூட கேட்கவில்லை
அந்த நாட்களில் கேட்பதெல்லாம்
ஆணின் அன்பையன்றோ...
ஆணின் அணுவை சுகத்தோடும்
பெண்ணின் அணுவை வலியில் குருதியோடும்
வெளியேற்றும் படைப்பை அளித்தனால்
அந்த ஆண்டவனும் ஒரு ஆணாதிக்கம் பிடித்தவனன்றோ...
விலகி விலக்கி வைப்பதனாலோ ஏனோ
அதன் பெயரையும் கூட மாத விலக்கு என்று வைத்தானோ...!