வெள்ளை
![](https://eluthu.com/images/loading.gif)
--- முனைவர் கவிஞர் தாமோதரகண்ணன், அலைபேசி-9442663637
வெள்ளை
இறைவன் தாய்ப்பாலை வெள்ளையாகப் படைத்தான்
பால்உடம்பில் கலப்பதற்கும் வெள்ளை உள்ளத்தில் கலப்பதற்கும்
கரிய யானையும் கவலை படக்கூடாதென
பெரியத் தந்தத்தையும் வெள்ளையாய் கொடுத்தார்.
விதவைக்கு வெள்ளை உடை வெறுமையின் சின்னம் இல்லை
ஒருவனுக்கு ஒருத்தி அப்படியே ஒருத்திக்கு ஒருவன்
பண்பாட்டைக் காக்கும் பொறுமையின் சின்னம்.
முன்தோன்றிய மூத்தகுடி ஆதலால்
கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளையில் தரப்பட்டது
பின்தோன்றிய மனிதன் ஆபத்தானவன் என அறிவிக்கவே
இரத்தம் சிவப்பு நிறத்தில் படைக்கப்பட்டது .
வானத்தில் வெள்ளைநிலா இருந்தால் வானமகள் அன்று சுமங்கலி தான்
வானத்தில் வெள்ளைநிலா இல்லையெனில் வானமகள் அன்று அமங்கலி தான்.
தசரதனின் காதோரம் வெள்ளைநரை தான் இராமனை நாடளச் சொன்னது
கிடைத்ததோ இராமனுக்கு வனவாசம் இரசிகனுக்கு இராமாயணம்.
பெற்றோரைப் பிள்ளைகள் கைவிடுவதைப் போல்
தலைமுடியில் கறுப்புநிறம் கைவிட்டாலும்
வெள்ளைநிறம் எழந்தல்லவா வேதனையைத் தீர்க்கிறது.
இருள்தேவதை தினமும் வெள்ளை வெளிச்சத்தண்ணீரில்
குளித்து வெளியே வந்தாலே விடியலாம்
இல்லையெனில் உலக வாழ்வே இருளிலே உருளலாம்.