ஏகபாத அந்தாதி-9
சிதம்பர தத்துவம் செப்பறை யுள்ளே
சிதம்பர தத்துவம் செப்பறை யுள்ளே
சிதம்பர தத்துவம் செப்பறை யுள்ளே
சிதம்பர தத்துவம் செப்பறை யுள்ளே
சிதம்பர=சித்+அம்பர தத்துவம் செப்பு+அறை யுள்ளே
சிதம்பர=சித்தம்+பரதத்துவம் இது பரத தத்துவம் அதாவது நடனம் விளங்குவது
சிதம்பரத்தின் செப்பு+அறை யுள்ளே தானே
சிதம்பர தத்துவம் செப்பறை யுள்ளே, செப்பு+அறை தாமிர சபையான நெல்லையிலே ஆமாம் அங்கும் நடம் ஆடுகின்றானே
சிதம்பர தத்துவம் செப்பறை யுள்ளே, செப்பு+அறை தாமிர சபையான நெல்லையிலே அதென்ன சிதம்பர தத்துவம் என்பீரா?
மனிதனின் சுவாசத்தை கணக்கிட்டு 21600 தங்க ஓடுகள் சிதம்பரத்தில் இருப்பது போல் நெல்லையில் கல் சுவற்றில் 21600 துளைகள் உள்ளன