உலக தமிழனின் உன்னதத் தலைவன்

விண்ணையும் மண்ணையும்
ஆயிந்தது போதுமென்று
காற்றோடு கலந்திட்ட கடவுள் துகளே


இருபது தமிழரின் ஈரம் காயாத ஆந்திரம்
கற்றை கண்ணீர் சிந்துகிறது உமக்காய்


காவிரித்தாய் பிறக்கும் கர்நாடகம்
கால் கடுக்க நின்றது
நும் கால்களில் கண்ணீர் சிந்த


முல்லை பெரியாரில் முறைத்த கேரளம்
நாளைய வளர்ச்சிக்கு வேண்டுது
இந்த மறத்தமிழனின் (அப்துல் கலாம்) எம்பளம் (அடையாளம்)


தமிழகத் தலைவன் தான்தானென்று
தத்தித் தாவும் கட்சிகளின்
தலையில் குட்டியது உலகம்


உலக தமிழனின்
உன்னதத் தலைவன்
ஒருவன் தான் யென்று
அதுவும் நீவிரென்று


கடைக்கோடி தலைமகனே
வாய்ச்சொல் வீரர்கள்
வாயடைத்து நின்றார்கள்
உங்கள் மௌனத்தின் முன்பு
பொய் பேச முடியாமல்


யாதுமாகி நின்றீர் அய்யா
எளிமையால் இப்பூவுலகை வென்றீர்


கனவு காண்கிறேன் நான்
1000 முறை பிறந்தெனும்
ஒருமுறையாவது வாய்க்குமோ
நும் போன்ற பயணம்(மரணம்) எனக்கும்....


குறிப்பு:
அன்பு கலாம் -க்கு சமர்ப்பணம்,

எழுதியவர் : நிழலன் (31-Jul-15, 8:24 pm)
சேர்த்தது : நிழலன்
பார்வை : 7633

மேலே