கலாமுக்கு ஒரு சலாம்
![](https://eluthu.com/images/loading.gif)
இந்திய இளைஞர்களைப்
பார்த்து வாங்க
பழகலாம் என்றவரே ...!
தலைப்பாகை இல்லாத
தமிழகத்து விவேகானந்தரே
வியக்கவைத்த வித்தகரே ...!
இயற்பியல் துறையில் துவங்கிய
இதயத்துடிப்பு, இந்தியா
வல்லரசு ஆகும் முன் - இயக்கம்
நின்றது ஏனோ?
நீர் தந்த வார்த்தைகள்
ஒவ்வொன்றும் ஒரு புது வேதம்
இது - வேதம் புதிது...
கண் கொண்ட காட்சி வெறும்
கனவு என்று இல்லாது
காண்பது கனவல்ல உன்
வாழ்வு என்றுணரச் செய்தவரே...!
காலத்தின் கால்கள் இடறி
கலாம் ஆனது அன்று
இன்று இடறிய கால்கள்
இல்லாது போனதே...
காலதேவா! கண்கொண்டு பார்
நீ கவர்ந்து சென்றது
காலமா? அல்லது கலாம? என...
உணர்வுகள் இன்றி உறவுகளில்
மேம்பட்டு வாழும் உலகில்
உணர்வாய் உறவுகளை
உங்கள்பால் உருவாக்கிய
உன்னத உத்தமரே!
ஓயாத கடல் அலையே - நெஞ்சில்
என்றும் ஓயாது உன்
நினைவலையே...
உந்தன் மூச்சி காற்றும்
கலந்தது கடல் காற்றோடு - நீர்
வாழ்ந்தது நேற்றோடு - என்றும்
இளையோர் உலகம் வாழும்
உங்கள் உயிர் மூச்சோடு
மதம் இனம் கடந்த
மானிட வாழ்வை இந்த
காலம் கடக்கச் செய்தவரே ....!
எங்கள் கலாம்
உங்கள் நினைவோடு என்றும்
செயலாற்றுவோம் என்று - எங்கள்
உயிர் தொட்டு, உங்களுக்கு
ஓர் சலாம்...