எதிர்பாரா தருணம்
அந்த ஒரு கண நேரம் மனதில் சாசுவாதமாக பதிந்திருந்தது!!
அடிக்கடி கல்யாண பேச்சு எழும்போதெலாம்
என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய விரும்பாத என் அம்மா
கலக்கம் அடையாமல் குதூகலித்தாள்!!
பெண் பிள்ளை என்றால் வீட்டு வேலை செய்தால் போதும்
படிப்பெல்லாம் அப்புறம் தான் என்று பழைய பாட்டே
பாடி கொண்டிருந்த அப்பா ஏனோ மௌனமாகவே இருந்தார்
பின் மெதுவாக என்னிடம் வந்து இன்னும் படிக்கலாம் இல்லப்பா என்று கேட்ட போது
ஆம் என்றோ இல்லை என்றோ சொல்ல நா எழவில்லை
மனம் புரிந்து பூரித்து இருந்தது
இத்தனை நாளாக புரியாத தந்தையின் அன்பை!!