இறைவனும் எழுத்துகாமும் ----------ஊவகணேசன்

சாமியும் ஒரு நாள்
பூமிக்கு வந்தார்....

ஆம்...

விமானத்தில் கூட
ஜன்னல் இருக்கைக்கு
சண்டையிடுவதாய்
நடைபாதை உறக்கக் கனவில்
உலாவந்த ஒருவனின்
கனவுக் குதிரையில்
கார்மேக வண்ணணாய்
கலியுகம் வந்தார்
கடவுள் பெருமான்.....

விலைவாசி மற்றும் கைபேசி
எனும் இரண்டாலே
மக்கள் எல்லாம்
மாக்களான செய்தி கண்டு
மனம் நொந்தார்.....

இதயத்தின் பாரம் நீங்க
எழுந்து நடந்தார்
சிறிது தூரம்.....

இயந்திர வாழ்க்கையில்
இயங்கும் மனிதனின்
இன்னல் கண்டு
இதயத்தில் வலி கொண்டார்....

கவலையின் துணையோடு
காலார நடந்த
கடவுளின் காதுகளை
துளைத்தன கண்ணதாசனின்
கவிதை அம்புகள்......

மனிதனை படைத்த
மகேஷனுக்கு வந்தது
மனதில் ஒரு குழப்பம்.....

கவிதை என்றால்
என்னவென்று.....

கடந்து சென்ற மனிதன்
ஒருவனைப் பார்த்து
ஓங்கிக் கேட்டார்.....

கோபத்தில் அவனோ
குரலுயர்த்திச் சொன்னான்....

எழுத்து.காம் என்றொரு
இணையதளம் போயிப்பாரு
எல்லாம் புரியும்
என்றான் அவனோ
ஈசனைப் பார்த்து.....

ஆண்டவனும் ஆர்வமாய்
ஆன்ட்ராய்டு கைபேசியை தன்
அற்புத்த்தால் வரவழைத்தார்.....

அறுபத்தெட்டு ரூபாய்
மதிப்புள்ள ஒரு டேட்டாவுக்கு
இருநூறு ரூபாய் கேட்ட
ரீசார்ஜ் கடைக்காரனிடம்
சண்டையிட்டு விட்டு
ஒரு வழியாக இணையத்தில்
நுழைந்தார்....

எழுத்து.காம் இணையத்தின்
உள்ளே சென்று
இணைய முகவரியாய்
.கடவுள்.காம்
என்று பதிவு செய்து
உறுப்பினராகி
உள்ளே நுழைந்தார்....

கடவுளுக்கு வந்த
ஆசையால் தானும்
கவிதை போட்டியில்
கலந்து கொள்வதாய்
முடிவு செய்தார்....

என்ன கவிதை
எழுதுவது என்று
யோசித்த பொழுது
தன்னைப் பற்றி
தானே எழுதினார்
தமிழில் ஒரு கவிதையை.....

மாதக் கடைசி என்பதால்
முடிவும் மறுநாளே
வெளியானது......

கடவுளின் கவிதைக்கு
தோல்வி.....

என்பதை விட
பரிசுக் கவிதையும்
கடவுள் என்ற
தலைப்பாய் போனதால்
கடவுளுக்கே வியப்பு....

என்னடா கொடுமை.....!

என்னைப் பற்றி
நானே எழுதி
எனக்குத் தோல்வி.....

என்னைப் பற்றி
என்னை விட
என்னால் படைக்கப்பட்ட
இந்த மனிதனுக்கு
எப்படி இவ்வளவு
விஷயம் தெரிந்தது என்று
கடவுளே வியந்தார்....

ஆம்....

படைப்பின் இரகசியம்
படைத்தவனுக்கே
புதிராய் போனது இங்கே.....!

எழுதியவர் : ganesan uthumalai (31-Jul-15, 11:29 pm)
சேர்த்தது : ஊ வ கணேசன் 311084
பார்வை : 45

மேலே