நடு நடுங்கிய தமிழ்க் குடும்பங்கள்
கும் இருட்டு.
அறையெங்கும் நிசப்தம்.
மின்விசிறியும் விறைத்து கிடந்தது.
சூறாவளிக் காற்று ஓ!
ஓ வென்று, ஓலமிட்டபடி உலாத்திக்
கொண்டிருந்தது.
முன் கதவு தாழிடப் பட்டது.
பின் கதவு பூட்டியாகி விட்டது.
அனைத்து ஜன்னல்களும்
அடைத்து கிடந்தது.
வெளி வெளிச்சம் அறைக்குள்
வராத படி திரையிட்டு இருந்தது.
மின் விளக்குகளும் அமர்த்தி இருந்தது.
மெதுவாக, அடி மேல் அடி வைத்து,
அப்பாவும் தன் ஆசை மகனும்,
வரவேற்ப்பறை சோபாவில் அமர்ந்து கொண்டனர்.
கவினுக்கு எட்டு வயது.
என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
சட்டென்று அப்பா அருகில் இல்லாததை
உணர்ந்து கொண்டு, அப்பா! அப்பா!
என்று அலறினான்.
கவின்! கவின்!
சத்தமிடாதே!
அமைதியா இரு,
அப்பா வந்துவிடுகிறேன் என்று
கம்மிய குரலில் விடையளித்தார்.
திடீர் என்று,
அறையெங்கும் வெளிச்சம்.
கண்கூசும் அளவிற்கு வெளிச்சம்.
அப்பா என்ன இது,
சொல்லு சொல்லுன்னு கத்தினான்.
கவினின் வாயை மூடியபடி,
பேசாமல் இரு....!
கவனமாக,
அப்பா சொல்லும் வரை
அமைதியாய் என் கையை
இறுகப் பற்றியபடி விழித்திரு...!
ஒன்றும் புரியாத கவின்,
கவனிக்கிறான்.....
டப்! டப்! டப்!
ஆ! என்ன அப்பா சத்தம்?
மகனே அவர்கள் வந்து விட்டார்கள்!
கதவை இறுக்க பூட்டி இருக்கிறேன்
பயங்கொள்ள கூடாது!
நாம் எந்தத் தப்பும் செய்யவில்லை...
நமக்கொன்றும் நேராது!
டமால்! டமால்...!!!
துப்பாக்கி சுடுமோசை எங்கோ
கேட்கிறது.
பதறி, நடு நடுங்கி
அப்பாவை இருக்கி பிடிக்கிறான்.
அப்பா? பயமா இருக்கு ப்பா,
அவங்க உள்ளே வந்தா,
அம்மாவயும், தங்கையும் அன்று
அடுச்சு கொன்ன மாதிரி,
என்னையும் அடிப்பாங்களா?
ஷ்! ஷ்! கதைக்காதே
மகனே! சத்தங் கேட்டு,
உள்ளே வருவாங்கோ!
அமைதி அமைதி!!
அப்பா ஏன் கதவத்
தட்டுறாங்க?
கவின், தமிழர் வீடுன்னா
தட்டுவாங்க,
ஒடச்சு உள்ளே வருவாங்க...
வீட்டை சூரையாடுவாங்க...
பணம், நகை கொள்ளையடிப்பாங்க!
அப்பா தமிழர்ண்ணா
என்ன?? என்றான் கவின்.
டமார், டமார் டமார்...!
சமையலறை ஜன்னல்
கண்ணாடிகளை நொரிக்கினர்..!
அப்பா முடியலப்பா......
மூச்சு முட்டுகிறது.
வேர்த்து புழுங்கி,
நனைந்து கிடந்தது இருவரின்
உடல்களும்.
கட்டிப் பிடித்து கொண்டனர்.
வனபத்ரகாளியை வேண்டிக்
கொண்டே, சுவர் மூலைக்கு
சென்றமர்தனர்.
வெளியில் இருந்து
பல குரல்கள் கூச்சலிட்டது ..!
அப்பா அவங்க என்ன
மொழி பேசுறாங்க?
என்ன சொல்லுறாங்க?
கவின், உள்ளே யார் இருந்தாலும்,
மரியாதையா வெளியே வரணும்,
வந்து சரணடயனும் வெறியோடு,
அவங்க பாஷையில கத்துறாங்க!
மகனே, என்ன ஆனாலும்,
வெளியே போகலாகாது.
கதவ ஓடைக்கட்டும்,
உள்ளே வரட்டும்,
சித்தரவதை செய்யட்டும்.
வெசனம் வேண்டாம்,
சரணடைவது சாவை விட
கொடியனரகம்.
ஒரு போதும் வேண்டாம் நமக்கு...!
அப்பா, அப்படி என்றால்,
நாம் சாகத்தான் வேணுமா?
இன்னும் நெரிய விளையாடனும் ப்பா,
பள்ளி போகணும்,
படிக்கணும்,
நண்பர்களோட பகடியாடனுன்னு,
சொல்லிச் சொல்லி....வாய்
மூடி கதறி கதறி அழுதான்.
அழுகாதே மகனே,
நமக்கு எது நடந்தாலும்,
இது உலகதிருக்கு செண்டு சேரும்...!
இங்க நடப்பதை,
ஒரு கமெரா கொண்டு பதியும்
படி செஞ்சிருகிறேன்....!
அப்பா?
செத்துப்போனா,
மேலோகத்துல அம்மாவ பாக்க முடியுமா?
முடியும் மகனே,
அங்க நாமெல்லாம் சேர்ந்து வசிக்கலாம்...
சந்தோசமா இருக்கலாம்...!
மெதுவாக காதோரம்
வந்த மகன்,
இந்த துணி நல்லா இருக்கா அப்பா?
அம்மாவ பார்க்கும் போது
நான் நல்லா இருக்கவேணும்ன்னு
சொல்லி வெட்கப்பட்டான்..!
இடியோசை கேட்கத்
தொடங்குறது...
ஒரு பீரங்கி முன் கதவை
இடிக்கிறது...
அய்யோ அய்யோ என்று
இருவரும் அலற,
சுட்டு வீழ்த்த உத்தரவு கிடைக்க,
வெளிச்சம் அடிக்கிறான் ஒருவன்,
படார் படார் என்று இருவர் சுட,
இறுக கட்டிய படி,
துடி துடித்து விழுந்தனர் ....!
வேண்டான்னு சொல்லுங்க அப்பா,
வேண்டான்னு சொல்லுங்கன்னு
கவின் கதறியபடி,
சோபாவில் இருந்து சரிந்து விழுகிறான்.
நீர் கோர்த்த கண்களோடு
தொலைகாட்சியை அனைத்துவிட்டு,
கவினை சமாதானம் செய்யத்
தொடங்கினார் அப்பா.......!