நிவேனிதா - காதல் தொடர் - பாகம் 3 - உதயா

கலையரசன் தனது தொலைப் பேசியை எடுத்து தனது காதலியை அழைத்தான். முதன் முறையாக தன் காதலியிடம் பேசுகிறோம் என்ற அச்சமும் பதபதப்பும் இன்றி கவிதை மலர்கள் பூத்துக் குலுங்கி காதல் தென்றல் வீசிக் கொண்டிருந்தது அவன் முகத்தில் . ஆனால் கலையரசனுக்கு நேர் மாறாக அவனது அழைப்பிற்காக காத்திருந்தால் நிவேனிதா. அழைப்பு வந்ததும் " ஹலோ " என தொடங்கினாள் நிவேனிதா.

" ஹலோ நிவி சாப்டியா என்ன மா பண்ணுற " என தொடங்கியது கலையரசனின் காதலுடன் சேர்ந்த கரிசனை உரையாடல்

" மாமா என்ன டா இவ்ளோ தெளிவா பயம் இல்லாம பேசுற " என் கேட்டாள் நிவேனிதா

" என் பொண்டாட்டி கிட்ட பேசா நான் ஏன்டி பயப்படனும் பைத்தியகாரி " என்று அவளின் வினாவிற்கு விடையளித்து விட்டு " நிவி என்னடி உன்னோட வாய்ஸ் ரொம்ப சாப்ட்டா இருக்கு .? உன் வாய்ஸ் நிஜமா சூப்பரா இருக்குடி எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு அம்மு " என்று தனது காதல் அணையினை திறந்துவிட்டான் கலையரசன்

" மாமா உனக்கு என் வாய்ஸ் புடிச்சி இருக்காடா..? " என்று அவள் கேட்டதும் " ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு செல்லம் " என்று அவன் அவளை கொஞ்சி கொஞ்சி பேசினான்

நிவேனிதா பெண் என்பதால் அவளது தாய் கொஞ்சம் கண்டிப்பாகவே அவளை வளர்த்தாள். ஆனால் அவள் பாசத்திற்காக ஏங்குவது யாருக்கும் தெரியவில்லை. கலையரசன் அவள் மீது அணவு செலுத்த செலுத்த அவள் கிட்ட தட்ட கலையரசனுக்கு அடிமையாகியே விட்டாள்.

அவள் மரணத்தின் நாட்கள் நெருங்க நெருங்க அவளுக்கு வயிறு வலி ,தலை வலி , கால் வலி என ஒவ்வொன்றாக அவ்வபோது அழையா விருந்தாளியாகி இருந்தது அவள் உடலுக்கு மட்டும். அவளுக்கு அடிக்கடி வலி வருவதால். அவளை கல்லூரி செல்ல வேண்டாம் என்று அவள் பெற்றோர்கள் கூறியதால் அவள் கல்லூரிக்கு செல்லவில்லை.

காலை எழுவதில் இருந்து மாலை 4 மணிக்கு கலையசன் கல்லூரியை முடித்து விட்டு அவளை தொலைப் பேசியில் அழைக்கும் வரை , அவளுக்கு நாள் முழுவதும் கலையரசன் நினைவு தான் அவள் காலை உணவினையே மதியம் 2 மணிக்கு தான் உண்பாள். மாலை 4 மணிக்கு கலையசன் அழைத்ததும்

" மாமா மாமா மாமா மாமா மாமா வந்துடியாடா.? சாப்டியா, மாமா நீ டுடே காலேஜ்க்கு என்ன கலர் டிரஸ் பொட்டுனு போன, மாமா நீ காலேஜ்ல இருக்கும் போது என்ன நெனச்சியா " என அவளின் வார்த்தைகள் அளவில் அடக்கமுடியா இன்பத்தை பெற்று அக்கறையாக மாறி தனது காதலன் மீது மழையாகக கொட்டி தீர்த்துக் கொண்டிருப்பாள்

நாட்கள் புரண்டோட அவள் கலையரசன் மீது கொண்ட காதல் இந்த பேரண்டத்தையும் கடந்து சென்று கொண்டிருந்தது . அவள் கலையசன் தான் தனக்கு உலகம் அவன்தான் தனக்கு அனைத்தும் என்ற ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள்ளே அவள் வாழ பழகிக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் " மாமா எனக்கு உன் நெஞ்சு தெரியறமாதிரி ஷர்ட் பட்டேன் கயட்டி விட்டு ஒரு போட்டோ எடுத்து அனுப்பு மாமா" என்று நிவேனிதா கலையரசனிடம் கேட்டு அடம் பிடித்தாள்.அவள் ஆசைப்பட்டவாறே கலையரசன் ஒரு போட்டோவை எடுத்து அனுப்பியதும் .

" ஐயோ மாமா எவ்ளோ அழகா இருக்க உம்மா மாமா " என்று அவன் போட்டோவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு " மாமா இப்போ நான் என்ன பண்ற தெரியுமா ..? நா... நா ... நா ...... என் மாமா நெஞ்சுமேல படுத்துனு இருக்க அப்புற என் மாமா நெஞ்சில இருக்குற ஹேர்ல விளையாடுற " என்று அவள் குழந்தை மாதிரி தொலைப் பேசியில் பேசினாள்.

" மாமா உனக்கு ஒன்னு தெரியுமா நா.. என்னோட பெட் ரூம்ல திரி (3) தலைகானி வெச்சினு இருக்க அதுல ஒன்னு என் புருஷன் நீ மீதி ரெண்டு நம்ம பசங்க மாமா . எனக்கு.. எனக்கு .. தூக்கமே வர்லனா கூட அந்த தலைகானிய கட்டி புடிச்சதும் எனக்கு தூக்கம் வந்துரும் மாமா " என அவள் சொன்னதும் கலையரசனுக்கு கண்ணீரே வந்து விட்டதே .

" நிவி நீ என்ன பாத்ததே இல்லடி. நான் உனக்கு எதுமே வாங்கி தந்தது கூட இல்ல ஏன்டி என்மேல இவ்ளோ பாசம் வெச்சினு இருக்க ..? ஏன்டி என்ன இவ்ளோ லவ் பண்ணுற " என்று கலையரசன் கண்ணீருடன் அவளிடம் தொலைப் பேசியில் கேட்டான்

" ஏன்டினா என்ன அர்த்தம் மாமா . நீ என் புருஷன் டா . மாமா நான் நல்லா இருந்த இருந்தா நீ எனக்கு எல்லாமே செய்து இருப்ப எனக்கு தெரியும் மாமா " என்று அவள் சொல்லியவாறே காதல் என்று வார்த்தைக்கு உயிர்கொடுத்து காதலுக்கு மகுடம் சூட்டிக் கொண்டிருந்தாள்.

" மாமா நீ என்ன எப்போடா பாக்க வருவ " என்று அவள் கேட்டதும்

" நீ அட்ரஸ் சொல்லுடி வர " என்றான் கலையரசன்

" மாமா உன் அத்தை இருப்பாங்கடா வீட்டுல " என அவள் சொன்னதும்

" நிவி நீ அட்ரஸ் சொலுடி நான் வர உங்க வீட்டுக்கு வெளிய நிக்கிற. நீ உங்க நீட்டுமேல இருந்து என்ன பாருடி " என்று கலையரசன் சொன்னான்

" மாமா நீ இப்படிலா பண்ணுவனு எனக்கு தெரியும் டா. மாமா என்னால உன்ன தூரத்துல இருந்துலா பாக்க முடியாது டா . உன்ன பாத்ததுமே ஓடிவந்து கட்டி புடிச்சிப. உனக்கு முத்தம் கொடுப்ப, அப்புறம் உன் மடியில உக்காந்துபடா , எனக்கு எவ்ளோ ஆசை இருக்கு தெரியுமா நீ தூரத்துல இருந்தே பாத்துட்டு போலான்னு பாக்குறியா உன்ன கொன்னுடுவ மாமா " என அவள் எங்கோ ஆசைக்கான வானத்தின் உச்சத்தில் காதல் அன்பினை கடந்து சென்றுகொண்டிருந்தாள்

தொடரும் ....

எழுதியவர் : உதயா (1-Aug-15, 7:43 am)
பார்வை : 756

மேலே