கொலை இரவு

ஒடு ஒடு ஓடு...


உடம்பின் அத்தனை செல்களும்
அவசரமாய் கதறிக் கொண்டிருக்க

உடம்பிலும் உடையிலும் முள்
கீறல் ஏற்படுத்த அதை பற்றி
கவனியாமல் ஓடிக் கொண்டிருந்தது
அந்த ஜோடி...


தூரத்தில் டார்ச் லைட்
வெளிச்சத்தில் அருவா கத்தி
உருட்டுக் கட்டையோடு தூரத்திக்
கொண்டிருந்தது அந்த கும்பல்...

விடாதே பிடி பிடி
அதோ ஓடிட்டு இருக்காங்க
பிடி பிடி பிடி...

கண்களில் போதையின்
சாயத்தையும் மீறிக் கொண்டு
கொலைவெறி மின்ன தூரத்திக்
கொண்டிருந்தனர்...
கும்பலில் நடுநாயகமாக
ஊர் பெரிய மனிதர்
சின்னராசு.'......

ஓடுகாலி நாய்க ரெண்டு
பேரையும் கொல்லனும் டே
விடாதீங்க பிடிங்க..
என்று .....


தட் தட் தட் தட்

ஹா ஹா ஹா...
மேல் மூச்சு கீழ் மூச்சு ஓடிக்
கொண்டிருந்தது அந்த ஜோடி.....


அவன் முரளி
அவள் ராணி

இருவரும் ஓரே கல்லூரி
ஓரே வகுப்பு...

அவள் அழகை கண்டு
அவளை ரசித்தான் இவன்,
இவன் எழுதிய சின்ன
சின்ன காதல் கவிதைகளில்
மயங்கினாள் இவள்..

காதல் வராமலா போகும்
வந்தது..
காதலித்தார்கள்
காதலை வளர்த்தார்கள்.....


ஒரு நாள் ராணியின்
வீட்டிற்க்கு காதல்
தெரிந்த போது....

ப்ளார்......

அறையில் அறையின்
மூலையில் விழுந்தாள் அவள்...

என் அந்தஸ் தென்ன கெளரவம் என்ன
கீழ் சாதி பையனை யா
காத விக்கிற..?
நாயே நாலு எழுத்து
படிக்க அனுப்பினா
கா தலையை படிக்கிற...?
இனி காலேஜ் போக வேணாம்
அடுத்த மூகூர்த்தத்துல உனக்கும்
அந்த சேகருக்கும் கல்யாணம்..
ரூ த்ர தாண்டவம் ஆடினார்
அவர் அந்த பெரிய மனிதர்
சின்னராசு...


அவனைக் காணாமல் இவள்
சோகமே உருவானாள்
இவன் தாடியே
உருவானான்...


இவள் தன் தோழி
மூலம் கடிதம் எழுத
பதில் கடிதம் எழுதினான்..

என்னுடன் வருகிறாயா
என்று...
அவள் சம்மதித்தாள்...


இதோ ஓடிக் கொண்டிருக்கிறார்கள்..

தட் கட் தட் தட்
தட் தட் தட்


ௐடி ஓடி
பதுங்கி பதுங்கி
இரயில்வே ஸ்டேசன்
வந்தடைந்தார்கள்......

ஹா ஹா ஹா
மூச்சு வாங்கியபடியே சுற்றும்
முற்றும் பார்த்தான் முரளி...

எங்கிருந்தோ ஓடி வந்தான்
முருகன் ,,,
முரளியின் நண்பன்

சீக்கிரம் வா
இந்தா இதுல
மாத்து துணி
பத்தாயிரம் பணம் இருக்கு சென்னையில
என் ப்ரெண்டோட அட்ரஸ்
அவன் கிட்ட நா எல்லாத்தையும்
சொல்லிருக்கேன் அங்க
அவன் ரீஜீஸ்டர் கல்யாணம்
பண்ணி வைப்பான்...

அப்பெn முது
ரயில் ப்ளாட்பார்ம்
வந்து நின்று ஆசுவாசப்படுத்திக்
கொண்டிருந்தது...

ஏறு ஏறு
சீக்கிரம்........

அப்பொழுது தப த பவென
அந்த கும்பல் அவர்களை
நோக்கி ஓடி வந்தது....


நீங்க உள்ள
போய் கதவை
சாத்திக்கோங்க சீக்கிரம் ம் ம்....

முருகன் அந்த
கும்பலை நோக்கி ஓடினான்
அவர்களை வழி
மனறத்தார் போல் நின்று
கொண்டான் .,,,

நில்லுங்க

டேய் மரியாதையா வழி விடு
இல்ல உன் உயிர்
இருக்காது......

என் உயிர் போனாலும்
வழி விட மாட்டேன
ஏன்யா சாதி சாதின் ரீங்க

நீங்க பொறக்கும் போது
உங்களுக்கு வைத்தியம் பார்த்த
டாக்டர் என்ன சாதி..?
நீங்க தின்ற சோறு விதைச்சவன்
என்ன சாதி னு பார்த்தீங்களா
நீங்க செத்தா புதைக்கிற
வெட்டியான் என்ன சாதி னு
பார்தீங்களா..?
தயவு செஞ்சு அவங்களை
வாழ விடுங்க
சாதி பேரு சொல்லி
காதலை பிரிக்கா தீங்கைய்யா.....

போடுடா அவன...

சதக்.........

கூட்டத்தில் எங்கிருந் தொ
வந்த அருவாள் வெட்டு
முருகன் கழுத்தில்
விழுந்தது..

அம்மா.....
அலறிக் கொண்டே
கீழே விழுந்தான்
முருகன்......

ரயில் கூகூ கூ கூ
தடக் தடக தடக்.........
என்று அந்த
கும்பலை கடந்து
வெகுதூரம் சென்றிருந்தது..........

எழுதியவர் : கவிஞன் அருள் (1-Aug-15, 2:08 pm)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : kolai iravu
பார்வை : 415

மேலே