ஓரு மழையும் ஒரு காதலும்

என் ஜன்னலுக்கு வெளியே
மழை பெய்கிறது..
ஜன்னல் கதவுகளை வீரிய
திறந்து வைத்துக் கொண்டு
மழையை ரசித்துக்
கொண்டிருக்கிறேன்....
மழைச் சாரல் முகத்தில்
பட்டு நலம் விசாரிக்கின்றது...

அப்பப்பா,,
இந்த மழை என்னவொரு
ஆனந்தம்...
மழையில் நனைவது அதைவிட
பேரானந்தம்..
மழையில் நனைவது எனக்கு
மிகப் பிடித்தமான ஓன்று...

யோசித்துப் பார்க்கிறேன்
மழை எனக்கு ஏன்
பிடித்த தொன்றாக மாறியதென்று..

இந்த மழைக்கும் எனக்கும்
நெருங்கிய தொடர்புண்டு,,,
மழை வரும் பொழுதெல்லாம்
எனக்கு நந்தினி-யின்
நினைவும் வரும்..

நந்தினி எனக்கு
மழை தந்த பரிசு....

அவளை முதன்முதலாக
என்று பார்த்தேன்...?
ஓரு மழை நாளில் தான் ....!

பரபரப்பான மதுரை
பெரியார் பேருந்து நிறுத்தத்தில்
தான் அவளை முதன்முதலாய்
ஓரு மழை நாளில் சந்தித்தேன்...

மழைக்கு அஞ்சி ஓதுங்கிய
டீக்கடை கடை வாசலின்
ஓரு ஓரத்தில் தான் அவள்
நின்று கொண்டிருந்தாள்...

சிலரை என்ன காரணத்தாலோ
பார்த்தவுடன் பிடித்து
விடுகிறது.. அப்படித்தான்
எனக்கு அவளைப் பார்த்தவுடன்
பிடித்து விட்டது..

நான் அவளையே பார்த்துக்
கொண்டிருப்பதை அவள்
கவனித்து விட்டாள் போலும்
திரும்பி என்னைப் பார்த்தாள்..
மின்னலடித்தது.....
அவள் கண்களிலா வானத்திலா
புரியவில்லை...
மழை விட்டதும் சென்று
விட்டாள்..

அவளை இரண்டாம் முறையாக
சந்தித்ததும் அதே போன்று
ஓரு மழை நாளில் தான்
அதே டீக்கடை வாசலில்
தான்...

இந்த முறை என்னைப்
பார்த்து புன்னகைத்தாள்..

எனக்கு ஜீல்லென சாரல்
அடித்தது போல
ஹோ... என்று
மழையில் குதித்து
ஆடி விடலாமா என்று
தோன்றியது..

அடிக்கடிப் பார்க்க பார்க்க
புன்னகைகள் வார்த்தைகளாயின,,,
அவள் பேசிய வார்த்தைகள்
கவிதையாகின,,, என்னுள்
காதலாகின....

ஓரு மழைக்காலத்தில்
தான் அவளிடம்
காதலைச் சொன்னேன்..
இரண்டு நாள் கழித்து
ஏற்றுக் கொண்டாள்
அதுவும் ஓரு மழை நாள்
தான்...

திருமலை நாயக்கர் மகாலும்,,
நேதாஜி பார்க்கும் எங்கள்
காதலை வளர்க்கும் இடங்களாகின...

இரண்டு வருடங்கள் இப்படியே
கழிந்தது..
ஒரு நாள் என்னைப்
பார்ப்பதை பேசுவதை தவிர்க்க
ஆரம்பித்தாள்..
செல்போனில் தொடர்பு
கொண்டால் ஸ்விட்ச் ஆப்
என்ற து, :.

கலங்கினேன் புலம்பினேன்
காரணம் புரியாமல்
பைத்தியமானேன்.....

ஒரு நாள் அவளைக் கண்டு
என் இப்படி செய்கிறாய்
என்றேன்....

இங்க பாரு அருள்
நாம காதலிச்சது எங்க வீட்டுல
தெரிஞ்சு போச்சு...
எங்க வீட்டுல எனக்கு
மாப்பிள்ளைய நிச்சயம்
பண்ணிட்டாங்கடா....
உன்ன எனக்கு ரொம்ப
பிடிக்கும் டா,,,,
ஆனா எங்க அப்பா அம்மாவ
எதிர்த்து கல்யாணம் பண்ணிக்க
மனசு இல்லடா...
என்ன விட நல்ல பொண்ணு
உனக்கு மனைவியா வருவாடா
என்ன மறந்துடுடா பிளிஸ்...
என்று கண்ணீருடன்
சென்று விட்டாள்.....
அன்றும் மழை வந்தது
என்னை நனைத்து கண்ணீரை
யாருக்கும் தெரியாமல்
மறைத்து விட்டது....

அதிலிருந்து ஏனோ
மழை வரும் பொழுதெல்லாம்
நந்தினி-யின் நினைவு
வருகின்றது...









(உங்கள் விமர்சனத்தையும்
Rate - யையும் எதிர்பார்த்து,,,,,,,,,,)

எழுதியவர் : கவிஞன் அருள் (1-Aug-15, 10:55 pm)
பார்வை : 429

மேலே