மரம் தனிமையானது

கல்லூரிக் காலங்களில்
நாம் அமர்ந்து
பேசிய மரத்தினடியில்
எதற்க்காகவோ
ஓதுங்கிய பொழுது
மரம்
உயிர் பெற்று
எங்கே அவள்
என்று கேட்டது....!!!
இரவானால்
உன் நிழல்
உன்னிடம் இருக்குமா
என்றேன்...
மரம் இருக்காதென்றது
அப்படி தான் அவளும்
என் நிழலாய் இருந்தவள்
கொஞ்சம் கொஞ்சமாய்
நீங்கிப் போனாள்
என்று என்
வழியில் நடந்தேன்
நான்.....!!!!
மரம் தனிமையானது
என்னைப் போலவே...!!!!

எழுதியவர் : (31-Jul-15, 7:52 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 233

மேலே