திடமாய் தீர்கமாய்
ஒவ்வொரு நகர்வும்
ஒவ்வொரு செயலும்
ஒவ்வொரு எண்ணமும்
ஒவ்வொரு ஆதங்கமும்
ஒவ்வொரு பரிதவிப்பும்
ஒவ்வொரு (நீலி) கண்ணீரும்
ஒவ்வொரு சமாதானமும்
ஒவ்வொரு சச்சரவும்
ஒவ்வொரு அழைப்பும்
ஒவ்வொரு ஆரத் தழுவலும்
அர்சுனன் மிஞ்சும் திடமாய்
தீர்கமாய் அடுத்து ஏங்கும்
தமதாட்சி நோக்கியே!
சல்லடையிட்டுத் தேடுகிறேன்
தவறியேனும் நாட்டின் கவலையை!
----- முரளி