எனது தலைவன் கலாம்
செந்நாபோதர்,
பெருநாவலர்,
"உலகப்பொதுமறை" யை இவ்வுலகுக்கு,
ஈன்ற பெருமான் திருவள்ளுவன் கூட,
திருக்குறளுக்கு விளக்கம் மட்டும்தான் தந்தான்,
அதன் பெருமையை உலகறியச் செய்த,
"உலகநாயகன்" எமது கலாம் அவர்கள்....
தமிழை தனது தாய்மொழி என்று,
சொல்லக்கூட விரும்பாத தலைவர்கள்,
மத்தியில் தமிழை ஐ.நா.சபையில்,
அரங்கேற்றிய,
"உன்னதமான தமிழன்" எனது கலாம்....
மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த,
கல்வி கண்ணை எமது தமிழகத்தில்,
திறந்த கர்மவீரன் "காமராஜ"ரை,
நான் கண்டதில்லை,
சீட்டுக்கவி, தீர்க்கதரிசி, "பாட்டுக்கொரு புலவன்"
புரட்சிக்கவி பாரதியின்,
வரிகளில் திளைத்திருக்கிறேன்....
ஆனால்,
அவனையும் கண்டதில்லை ...
ஜாதி, மதம், இனம், தீண்டாமைக்
கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த,
பகுத்தறிவுப் பகலவன், பழுத்த பழம்,
ஈரோட்டுச் சிங்கம்,
அன்புக்குரிய ஈ.வெ.ராமசாமியையும்
பார்த்ததில்லை....
அகிம்சையை ஏந்தி, நமது பாரத,
நாட்டை அந்நியனிடமிருந்து காத்த,
மகாத்மாவையும் கண்டதில்லை...
கொடிகாத்த குமரன்,
சுபாஷ் சந்திர போஸ் - இவர்களையும்
கண்டதில்லை....
இவர்கள் அனைவரையும்,
ஒருசேர,
உனதுருவில் கண்டேன் ஐயா...!
அனைத்து மதத்தினருக்கும்,
கிடைத்த புனித நூல் நீ ...!!
பஞ்சம், பட்டினி,
ஜாதிக்கலவரம் - என்றிருந்த,
எனது,
தாய்த்திருநாட்டை,
உலக அரங்கில் மிளிரச் செய்த,
"விண்ணகத்து எஜமான்" நீ ....
இந்தியனை கேளிக்கையாகப்,
பார்த்த வளர்ந்த நாட்டவர்,
பொரியில் தட்டியது போல்,
ஏவுகணையை விண்ணை
நோக்கிச் செலுத்திய,
"ஏவுகணை மன்னன்" நீ ...
குழந்தைகளின் கனவு நாயகன் நீ ....
பாரதத்தின் உண்மை நாயகன் நீ ...
புதுமைக்கு நீ ஒரு ... சகாப்தம்,
இனியொரு கலாம்,
இம்மண்ணில்,
பிறப்பான் என்று தெரியாது,
ஆனால்,
இந்த மண்ணில் பிறப்பெடுக்கும்,
ஒவ்வொரு இந்தியனும்,
கலாமாக மாற வேண்டும்...
உனது,
கனவு நிஜமாக வேண்டும் ...
உடல் அழிந்தாலும்,
உனது உயிர்,
இமயம் முதல் குமரி வரை,
இம்மண்ணை,
தழுவிக்கொண்டேதான் இருக்கும்...
மனிதனை இழந்த,
வருத்ததுடன் இல்லை நாங்கள்,
மனிதாபிமானம் கொண்ட,
மாமனிதனை இழந்துவிட்டோம்
என்ற வருத்தத்துடன் நாங்கள்..
இந்தியர்கள்..!