நடைபிணம்

வாடிப் போவதற்கு நான்
பூக்களாக பிறந்திருக்க வேண்டும் ....
மானிடனாய் பிறந்ததால் தான் என்னவோ
காதலனாய் உன்னுள் புதையுண்டு கிடக்கிறேன்...!!!

நீ என்னுள் பூத்ததன் பெயர் காதல் என்றால்,
செடியில் பூக்கள் பூப்பதும் காதல் தான்....!!

சிறந்த கதைகளுக்கு கூட முடிவு
இல்லாமல் போகிறது...!!
நம்மையே காதலித்த நம் காதலுக்குமா
முடிவு இல்லாமல் போய் விட்டது...!!!!

முளைத்த பிறகும் வாடி அழிந்து போகும்
பயிரைப் போல...
நம்முள் முளைத்த நம் காதலையும்
கருகிப் போக செய்தாயே...!!!

இறப்பதற்கு பல காரணங்கள் இருக்கும் போதும்
உன்னுடன் வாழ்வதற்கான காரணம்
தேடி அலைந்து தோற்று போனவன் நான் ......!!!

தோல்வி எனும் புத்தகம் இருப்பதால் தான்
வெற்றி எனும் காதலி கவிதை எழுதுகிறாள்..
அனால், நீ மட்டும் தான் தோல்வி புத்தகத்தில்
தோல்வி முடிவுரைகள் பதிக்கிறாய்....!!

தேய்பிறையாய் தொலைந்து போனாயே பெண்ணே...!!
திக்கு தெரியாமல் தேடி அலைகிறேன்...!!
யாரிடம் போக ...!!
உன்னை நான் திரும்ப பெற சூரியனிடமா,
யாசகம் கேட்க வேண்டும் ...!!

எழுதியவர் : பிரவின் ஷீஜா (1-Aug-15, 11:08 am)
Tanglish : nadaipinam
பார்வை : 527

மேலே