இறுதி நாளில் முதல் கவிதை அப்துல் கலாம் அவர்களுக்கு

அக்னி அனைந்து போனது
இந்தியா முழூவதும்
கலந்து போனது
*
இந்த
விஞ்ஞானம் எதை தேடி
விண்ணுக்கு சென்றது
*
எத்தனை மரக்கன்றுகள்
நட்டு வைத்தாய் ஒரு
மரம் கூடவா உங்களுக்கு
ஆக்ஸிஜன் தர மறுத்துவிட்டன
*
ஒரு இதயம் நிற்க
பல கோடி இதயம்
துடி துடிக்கிறது
*
குறைகள் தீர்க்க தான்
குடியரசு தலைவர் ஆனபோதே
மின்னஞ்சல் முகவரி தந்தீர்களே

அதில் அவன்(எமன்) தகவல் தந்திருக்கலாமே?
அதை அறிந்திருந்தால் அவன் ஏன்
பூலோகம் வர போகிறான்
*
கேள்விக்கான பதிலையும் நானே கூறி
சமாதானம் கொண்டாலும் போர்வைக்குள்
கதறும் காதலியாகவே கதறுகிறேன்
*
உங்களை மற்றவைகளோடு ஓப்பிட முடியாதே
ஏனெனில் யார் பாதையை நீங்கள் பின்பற்றி
சென்றீர்கள்
*
உங்களுடைய வார்த்தைகள்
என்னுடைய வாழ்க்கை என்றே
எண்ணி கொள்கிறேன்........

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (1-Aug-15, 5:24 pm)
பார்வை : 107

மேலே