சொந்தம்

சொந்தங்கள் எல்லாம்
சோதனைகள் தந்திடுகையில்
வாழும் வழி தேடி
வளர நினைக்கையில்
வரும் அபயக் கரம் எதுவாயினும்
அதுவே சொந்தபந்தம்!
இரத்த சம்பந்தங்கள்
சாதி சம்பிரதாயங்கள்
இனங்கள் எதுவும்
உறவை நிர்ணயிப்பதில்லை
ஈர நெஞ்சங்கள் எல்லாம்
உறவே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Aug-15, 5:22 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : sontham
பார்வை : 76

மேலே