இறைவனிடம் வேண்டுகின்றேன்

இறைவனிடம் வேண்டுகின்றேன்-என்
இதயத்தை கொடுத்துவிடு
வாழ்க்கையை தேடுகின்றேன்-என்
பாதையை காட்டிவிடு
கனவுகளும் கூட என்னை
கண்கலங்க வைக்கிறதே
கவிதையில் கூட உந்தன்
நினைவுகள் அழுகிறதே

வீணை மீட்டும் போதினிலே
தந்தியில் ராகமில்லை
விழிகள் தேடும் போதினிலே
ஜீவனைக் காணவில்லை
உன் நினைவுகளை குடிப்பதற்கு
மனசுக்கு தாகமடி
உன் நிழலைக் காணாமல்
என் தேகம் எரியுதடி
கவிதையும் அழுகிதடி
காதலும் பாவமடி
வார்த்தையும் ஊமையடி
வாழ்க்கையும் சோகமடி

கனவுகளும் நினைவுகளும்
உன்னோடு பேசுகிறதே
தனிமைகளும் பிரிவுகளும்
நினைவோடு வாழ்கிறதே
விதி வரைந்த பாதையிலே
வாழ்க்கை ஒரு நாடகம்
விழி நனையும் போதினில்
காதல் ஒரு ஓவியம்
கடலிலே துரும்பானேன்
காற்றிலே தூசானேன்
விழியிலே மழையானேன்
விடியலில் இருளானேன்

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (21-May-11, 12:29 am)
பார்வை : 332

மேலே