கலங்காதே என்தாயே!
அன்னை உறவிலே
.
போற்றும் தெய்வம் அவள்
அன்பு மழையிலே
அணைக்கும்
ஜீவன் அவள்
குழந்தை பருவத்தில் அணைத்துப்
பாலை ஊட்டுவாள்
அவளின் உள்ளத்தால் உயிராய்
அன்பை ஊட்டுவாள்
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
ஏற்ற கஷ்டம் போதுமம்மா
இனிவரும் காலங்கள் உன்உடல் கரம்தாங்கி
உந்தன் உயிர் காப்பேனம்மா
உன் மூச்சில் எனை காத்து
பூமிக்கு கொடுத்தாயம்மா
உன் கரம் எனை அணைத்து
கானங்கள் இசைத்தாயம்மா
உறவுகள் பிரியும் வேளை
பாசங்களும் தவிக்குதம்மா
உயிர்கள் பிரியும் வேளை
உறவுகள் அழுகுதம்மா
நீ கொடுத்த பாதைகளில்
நானிருந்து வாழுகின்றேன்
நீ கொடுத்த வார்த்தைகளால்
நானுமிங்கு பாடுகின்றேன்
கலங்காதே என்தாயே! உனை
காண்பேனே வெகுநாளில்
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உன்கடனை தீர்ப்பதற்கு இயலாதம்மா
கோடிகோடி பணம் பவுண் கொடுத்தாலும்
உன்கடனை சொல்வதற்கு முடியாதம்மா
உன் முகம் காணாமல்
என் உள்ளம் வாடுதம்மா
உன்னோடு பேசாமல்
என் ஜீவன் தவிக்குதம்மா
கண்ணீரும் இங்கே தான்
கவிதைகள் எழுதுதம்மா
வெந்நீரில் இங்கே தான்
காலங்கள் மூழ்குதம்மா
இன்று பெற்ற காயங்கள்
இத்துடனே முடிந்திடுமா?
இனிவரும் காலங்கள்
இன்னலுடன் தொடர்ந்திடுமா?
கலங்காதே என்தாயே! உனை
காண்பேனே வெகுநாளில்