எரியும் என் சிதைக்கு

வெடி வைத்து தகர்த்தெறிந்த
கல்குவாரியாய் - உன்
விழி வைத்து உடைத்தெறிந்தாய் எனை !
ஊற்றெடுத்த காதல் என்
உள்ளத்தில் தேங்க !
எட்டாத உயரத்தில்
கிட்டாக் கனியாக நீ எனக்கு !
வெட்டாக் குளத்தில்
வற்றா நீராக
நான் உனக்கு !
என் காதல்
வற்றும் நேரத்தில்
உன் காது வந்து சேருமடி
நான் காலமான சேதி !
காற்றில் கலந்துவிடு
உன் காதலை
கண்ணீர் துளிகளாக !
எரியும் என் சிதைக்கு
எண்ணெய் வேண்டும் !