மழைத்துளி
எத்தனை மழைத்துளிகள் இம்மண்ணை அடைந்தாலும்
எனக்கென்று என் கையில் விழுந்த ஒரு துளி நீ!
சொல் அன்பே!
இரவின் மடியில் வீற்றிருக்கும் நிலவிடமிருந்து உன்னை உறையாமல் காப்பாற்றவா!
இல்லை
பகலெனும் வணிகத்தில் அதிக வெப்பத்தை விற்பனை செய்யும்
சூரியனிடமிருந்து உலராமல் காப்பற்றவா!
சொல் அன்பே!
என் இமைப் பொழுதிலும் வைத்து என் கண் இமைக்காமலும் பார்த்துக் கொள்கிறேன்!