பிறக்காத கவிதைகள்

காணாத கண்கள்
தேடுகிறன..

மை தீர்ந்த
பின்பும் எழுதிக்
கொண்டிருக்கிறது பேனா..

அழும் குழந்தை
அழுகையை நிறுத்தி
வேடிக்கைப் பார்த்து
புன்னகைக்க ஆரம்பித்து
விட்டது...

முழுமை பெறாத மூங்கில்
மரங்கள் புல்லாங்குழல்
சங்கீதம் இசைக்க
ஆரம்பித்து விட்டன...

பார்த்த இடமெல்லாம்
கற்பனையை கவிதையாக்கி
கவிதைகள் சிருஷ்டிக்க
ஆரம்பித்து விட்டன..

இத்தனை நாள்
காத்திருந்தும் பிரிவு கூட
ரசிப்பு தன்மையாக
மாறி விட்டன...


ஏதோ
ஓரு மூலையுல்
வார்த்தை பிறக்காமல்
ஒரு கவிஞனின்
பிரசவத்திற்க்காக
காத்துக் கொண்டிருக்கிறது
கவிதை.....

















.
.

எழுதியவர் : கவிஞன் அருள் (4-Aug-15, 12:04 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 97

மேலே