பாரதிக்கு கடிதம்

" பாரதிக்கு கடிதம்"
நின்பால் வெகுண்டேன் பாரதி
நீயோ பாக்களுக்கு சாரதி
தமிழே நினக்கென்றும் கதி
தம் குடும்பம் தனக்கு செய்தீர் சதி
தமது மறைவுக்கு பின்னே அவர் வுயர்ந்தது விதி
என்றுசொல்ல மறுக்கிறது எனது மதி
கவிதை உமக்கு தொழில்
கட்டிய மனைவியை காப்பதும் நின் தொழிலே அன்றோ
நீ செய்த இத்தவறன்றி வேறொரு குறையுண்டோ உன்னிடம்
நினதுதோழியாய் நானுற்ற துயரத்திற்கும்
நின்பால் நான் வெகுண்டதிற்கும் இதுவே காரணமாகும்
நினது வருத்தம் புரிகிறது அன்றே ஏன் சொல்லவில்லை என
நீ என்னை திட்டாதே எனக்கும் வாய்ப்பு கிட்டியது இப்போதே

எழுதியவர் : ருத்யா / அரங்கமொழியால் (4-Aug-15, 5:29 pm)
Tanglish : kavithai
பார்வை : 282

மேலே