உன்னை நீ மாற்றி கொள்ளாதே
வணக்கம் சொல்ல
நேரமில்லா
கால ஓட்டத்தில்
உன்னை நீ
மாற்றி கொள்ளாதே
புன்னகையும் ,
சகிப்பு தன்மையும் ,
நட்பென்னும் பட்டம்
வானில் பறக்க
அவசியமான
காற்று ,நூலை போன்றது
கிண்டலும், கேலியும்
நட்பென்னும் தாயின்
இரட்டை குழந்தைகள்
சந்தோசத்தை பகிர்ந்து
சில சங்கடங்களை
சகிக்க பழகு
சந்தோசத்திற்காக
உதிர்கின்ற
வார்த்தைகளால்
சங்கடமென்னும்
மாலை தொடுக்காதே !
இருக்கும் வரைதான்
வாழ்க்கைக்கு மதிப்பு
நட்பும் ! கற்பும் !
அன்றும், இன்றும்
எதையும் யோசிக்காமல்
நண்பர்களின் கிண்டலை
காலால் மிதுத்து
சந்தோசத்திற்கு
தோல் கொடுக்கும்
தோழனே !
குறும்பு தனமும்
குழந்தை குணமும்
வாழ்வின் வரங்கள்
என்றென்றும்
புன்னகையுடன்
உன்னை நீ
மாற்றி கொள்ளாதே !