உயிர்கள் உள்ளவரை

வாழ்கின்ற வாழ்கையில் அன்புத் தூறல்கள்
அன்னை தந்தை அன்புச் சகோதரர்
இன்னும் அன்பு மனைவி குழந்தைகள் இந்த
அன்பு வட்டங்கள் நம்மை வளைய வளைய
வந்து கொண்டே இருக்கும்
இத்துடன் உற்ற நண்பர்கள் அன்பு
நம்மை தூக்கி ஏற்றி விடும் ஈடு இணையில்லா
உண்மை அன்பு, ஆயுள் எல்லாம் கூட வரும்
நம்மை நிழல் போல் தொடர்ந்து வரும்
இதனால் எதற்கும் நாம் சளைத்து விட மாட்டோம்
தோல்வி இல்லை, நம் அன்பில் சோர்வு இல்லை
மீண்டும் மீண்டும் அன்பு வட்டம் நம்மை சுற்றி
வந்து கொண்டே இருக்கும்
இந்த வாழ்க்கை அன்பினால் உருவாக்கப் பட்டு
அன்புக்கே அர்ப்பணம் ஆனது
அன்பு இல்லை என்றால்
இவுலக வாழ்கை பூஜ்யம் தான்
அன்பு ஒன்றே மனிதனை ஆளும் சக்தி
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
அன்பு இல்லை என்றால் பயனேது /
அன்பும் கடவுளும் ஓன்று அன்பே கடவுள்
அந்த அன்பே உலகின் எல்லை வரை உயிர்கள் உள்ளவரை
ஓய்வின்றிக் காத்திடும் உன்னத மருந்து
உறங்காது காக்கும் உடனிருந்து பார்க்கும்
ஒப்பற்ற எதிர்பார்ப்பில்லாத அற்புத உணர்வு அன்பு மட்டுமே

எழுதியவர் : பாத்திமா மலர் (4-Aug-15, 9:32 pm)
Tanglish : uyirkal ullavarai
பார்வை : 107

மேலே