வீரனே உன்னை எண்ணி உன் குடும்பத்தை எண்ணி

உறக்கம் இல்லா விழிகள்
உன்னையே நினைக்கிறது..
செய்திகள் கேட்கையிலே
செவியெல்லாம் பதறுகிறது..
சண்டையிட்டு நீ ஜெயித்தால்
சக மனிதர் தான் புகழ்வார்..
சரிந்து நீயும் மாண்டு விட்டால்
சங்கடம் போக்க யார் வருவார்..
உன் வாழ்வும் சாவும் தெரியவில்லை
நீ காக்கும் மக்களுக்கு..
இருந்தாலும் உழைகின்றாய்
என்னே! இரக்ககுணம் உனக்கு..
நேந்து தான் விட்டுவிட்டோம்
நேசத்தோடு நாட்டிற்கு..
பாசத்தோடு பயம்கொண்டோம்
பத்திரமாய் வருவாயா?
குறிப்பு:
இவர்களோடு சேர்ந்து நாட்டிற்காக ரத்தம் தான் சிந்தவில்லை
இவர்களின் முடிவிற்காக வருந்தி கண்ணீராவது சிந்துவோம்..