காதில பூ

காப்பிக்கடை..
இணைய வசதி
இலவசமாகக்
கிடைக்கிறதாம்
ஆனால்...
எழுதத் தெரியவில்லை..
எத்தனையோ
பேரை ஏமாற்ற
இங்கு
இருந்தும்
இல்லாதிருக்கிறது
இந்த
ஒய்-ஃபை
கோப்பைகள்
காலியான பின்னரும்
கை தேயத் தேய
கடவுச் சொல்
எழுத
முயற்சித்துக் கொண்டே
இருக்கின்றனர்
சில இளிச்ச வாயர்கள்

எழுதியவர் : சிவநாதன் (5-Aug-15, 9:35 pm)
பார்வை : 121

மேலே