உந்தன் உயிர் வலி தான் எந்தன் உயிரை கொல்லுதே

இங்கே எந்தன் உயிர் இருக்க
எங்கே செல்வேன் எந்தன் அன்பே!

உந்தன் உயிர் வலி தான்
எந்தன் உயிரை கொல்லுதே!

கால்கள் ரெண்டும் செல்லும்
பாதை ஒன்று தான்

கடலை சேரும்
நதியும் கடலும்
ஆனதே...

எங்கே எந்தன்
வசந்தமோ?
தொலைந்து போனதோ!
உந்தன் நெஞ்சிலே...

உன்னில் என்னை
கரைத்து ஏற்றுக்கொள்ளடி கண்மணி!

இலையை எடுத்து தானே!
எறிந்து போகலாம்!
வேரை அறுத்து தானே!
எங்கு வைப்பது....


எங்கே சென்றாய்
எந்தன் உயிர்...
இங்கே உந்தன் உயிர் இருக்க...


வந்து இங்கு
என்னை அழைத்துச்செல்லடி...

உன்னை ஆரத்தழுவி
என்னை விடுதலை செய்யடி...

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Aug-15, 10:08 pm)
பார்வை : 164

மேலே